மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மாற்று பாதையை உருவாக்கவே நடத்தப்பட்டது. இதில் 10 லட்சத்திற்கும் மேலான பொது மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு ஊழல் இல்லாத, மது இல்லாத தமிழகம் உருவாக்க கட்டியம் கூறும் வகையில் திரண்டிருந்தனர். மதுரையே விழா கோலம் பூண்டிருந்தது. காணும் இடமெல்லாம் மக்கள் கூட்டம்.
மக்கள் நலக் கூட்டணியின் இந்த மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில் கம்யூனிஸ்டு தேசிய தலைவர்களும், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சிறப்புறையாற்றினார்கள்.
யானைமலையை உடைக்க முடியாததை போல, மக்கள் நலக் கூட்டணி யையும் உடைக்க முடியாது என முத்த கம்யுனிஸ்டு தலைவர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி நல்லகண்ணு அவர்கள் வீர் முழக்கமிட்டார்.
ஊழல், மது. இந்த இரண்டுக்கும் யார் பொறுப்போ, அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. சாதி, மதம் ஆகியவற்றுக்கு யார் பொறுப்போ, அவர்கள் வலிமை பெற்றுவிடக் கூடாது. ஒவ்வொரு வாக்காளனும் இதைக் கவனத்தில் கொண்டு முற்போக்கான, புரட்சிகரமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் மக்கள் நலக் கூட்டணியாக முன்வைத்துள்ளோம். இதையே தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரமாக முன்னிறுத்துவோம் என தொல் திருமாவளவன் நம்பிக்கையோடு பேசினார்.
கடைசியாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மாநாட்டுக்கு தலைமை தாங்கியவருமான, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசிகையில், உளவுதுறை முலம் மக்கள் நல. கூட்டணிக்கூட்டணி வரும் வாகனம் மற்றும் தொண்டர்களையும் கணக்கெடுப்பு நடத்தியது. இதுவரை இல்லாத பயம் இப்போது வந்திருக்கிறது.
55000 லாரி மணல் தினமும் அதிமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கப்படுகிறது. அது அம்பலத்திற்கு வந்த போது 21 லட்சம் கோடி கொள்ளை போனது என்றார் வைகோ.
இன்றைய மாநாட்டின் கூட்டத்தை பார்த்து இருவருக்கு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அதிமுக மற்றும் திமுக கட்சிகளை குப்பைத்தொட்டியில் வீசவே இந்த ஜன.26 ஐ தேர்ந்தெடுத்தோம் என கூறினார் வைகோ.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என முழக்கமிட்டு அரிச்சந்திரன் சுடுகாட்டை காத்து வெளியிட்ட கிரானைட் ஊழல் அறிக்கை என்னவாயிற்று எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.
ஊழல் அனைத்தும் செய்துவிட்டு, இப்போது திமுக நேர்மையான ஆட்சியை தரும் என்று சொல்கிறார்கள். எப்படி அது நடக்கும். வழிப்பறி கொள்ளை நடந்த கொலை பாலியல் வன்முறைகளை இரண்டு ஆட்சிகளிலும் நடந்ததை பட்டியலிட்டு பேசினார் வைகோ.
கற்பழித்து விட்டு குற்றத்தை ஒத்து கொண்டால் விட்டு விடலாமா? மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு விட்டு இப்போது தவறென்றால் விட்டு விடலாமா எனவும் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார் வைகோ.
ராஜாஜி வீடு தேடி சென்று கேட்டும் மதுவை கொண்டு வந்த திமுகவா மதுவிலக்கை கொண்டு வரும் எனவும் சாடினார். நமக்கு நாமே என்கிறார் ஒருவர். எனக்கு நானே என்கிறார் மற்றொருவர் என ஸ்டாலினையும் ஜெயலலிதாவையும் சாடினார். வைகோ.
மதுக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்குங்கள் என்றார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். அதே நிலை தமிழகத்திலும் வரும் என எச்சரித்தார் வைகோ.
வெளிப்படையான கூட்டணி ஆட்சியை நிச்சயம் அமைப்போம். நாங்கள் விண்ணையே போட்டிக்கு அழைப்போம். ஊழலற்ற, மதுவற்ற ஆட்சியை நிச்சயம் அமைப்போம் எனவும் உறுதியளித்தார் வைகோ.
மீனவ நலனில் சிங்களவன் கொட்டத்தை அடக்குவோம். இணைய வணிகத்தை தடை செய்வோம். ஊழல் சொத்தை பறிமுதல் செய்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் வைகோ. கருத்து கணிப்பு திணிப்பெல்லாம் தூள் தூளாகும் என பேசினார் வைகோ.
மாநாடு வெற்றியடைந்தது. எதிர்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றனர். தமிழகமே மதுரையில் இருந்ததை உலகமே அறிந்து கொண்டது. இப்படி மக்கள் எழுச்சிவெள்ளம் திரண்டது மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை அமைப்பதாகவே கருதுகிறது. 2016 மக்கள் நலக் கூட்டணியே ஆட்சி அமைக்கும். தமிழகம் சீர்படுத்தப்படும்.
No comments:
Post a Comment