Friday, January 27, 2017

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! வைகோ அறிக்கை!

திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கும், 30 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் பல இலட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் பணியினை தொடங்கிவிட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி நதிநீர் தீர்ப்பாய தீர்ப்பின் சில பகுதிகளை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி தீர்ப்பாய தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்படவில்லை. எந்த ஒரு நீர்ப்பாசன திட்டங்களை தொடங்குவது என்றாலும், அணைகள் கட்டுவதானாலும் அந்த நீர்ப்பாசனப் பகுதியைக் கொண்டிருக்கும் தமிழக அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பதோடு, மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியையும் பெறவேண்டும் என்ற சட்ட நியதிகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழகத்தின் திருப்பூர், கரூர் மாவட்டங்களை அடியோடு பாலைவனமாக்கிடும் செயலில் கேரள மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து பாம்பாற்றின் குறுக்கே அiணை கட்டும் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சித்து வந்ததை அறிந்து மறுமலர்ச்சி தி.மு.க. போர்க்குரல் எழுப்பியது.

இதே காலகட்டத்தில் தமிழக பாசனப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாய அமைப்புகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் வெகுண்டு எழுந்து போராடியதன் விளைவாகவும், தமிழக அரசு முயற்சி மேற்கொண்டதன் விளைவாகவும் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

2010 பிப்ரவரி 15 உடுமலைப்பேட்டையில் பல்லாயிரம் விவசாயிகள், வணிகப் பெருமக்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற இந்தஉண்ணாவிரத அறப்போர் மேடை சரிந்து விழுந்துதான் திருப்பூர் மாவட்டச் செயலாளரும், பாசன விவசாயிகள் சங்கத் தலைவருமான அன்புச் சகோதரர் ஆர்.டி.மாரியப்பன் அவர்களின் கால் எலும்பு முறிந்தது.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்தும், 2010 மே 28 அன்று நேரடியாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த எனது தலைமையில் கேரளா நோக்கி பயணம் மேற்கொண்டபோது கேரள-தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, நானும் தோழர்களும் கைது செய்யப்பட்டோம்.

பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டும் ஆபத்தை உணர்ந்து, அதைத் தடுத்திடும் வகையில் மக்களைத் தயார் செய்திட 2012 ஜூன் 24 இல் அமராவதி அணையின் முக்கியப் பாசனப் பகுதியெங்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன்.

பல அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் கடுமையாகப் போராடின. தொடர்ந்து 2014 இல் கேரளா அடிக்கல் நாட்டியது என்றாலும், பாசனப் பகுதி எங்கும் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாகவும், தமிழக அரசு முயற்சியாலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இரண்டு டி.எம்.சி. நீரை தேக்குவதற்காக அணை கட்டுவதாக கேரள அரசு கூறுகிறது. அமராவதி அணையின் மொத்தக் கொள்ளளவே 4.டி.எம்.சி. தான் என்கிறபோது, அமராவதி அணை வறண்டு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்க நேரிடும். பல இலட்சம் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும்.

தமிழக அரசின் அனுமதியோ, மத்திய சுற்றுச் சூழல்துறையின் முன் அனுமதியோ இன்றி தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக கேரள மாநில அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்திட முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகத்திற்கு உரிமைப்பட்ட நீராதாரங்களைத் தடுக்கும் இதுபோன்ற போக்கைக் கண்டித்து தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் கொதித்து எழுந்து போராடும் நிலையை அண்டை மாநிலங்கள் வலிந்து உருவாக்கிடும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிகையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, January 25, 2017

மதிமுக நடத்திய மொழிப் போர் தியாகிகள் கூட்டம்!

மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் இன்று 25-01-2017 மாலை தென்சென்னையில் சைதை பகுதியில், ஜாபர்கான் பேட்டை, கங்கை அம்மன் கோயில் திடலிலே நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மறுமலர்ச்சி மாணவர் மன்றம், மதிமுக மாணவரணி நிர்வாகிகள் உரையாற்றினார்கள். மதிமுக தலைவர்கள் சார்பாக டிஆர்ஆர் செங்குட்டுவன் உரையாற்றினார்.

மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை பற்றி பேருரையாற்றிய வைகோ அவர்கள், 1994 ஆண்டு ஜனவ்ரி 25 ல் ஜீவன் உள்ளிட்ட தம்பிமார்களை அனுப்பி, புதர்களை அகற்றி தாளமுத்து நடராசன் கல்லறைக்கு செல்கின்ற பாதையை செப்பனிட்டு நாங்கள் போய் மலர்கள் தூவி வீரவணக்கம் செய்த பிறகுதான் அனைவருமே தாளமுத்து நடராசன் கல்லறைக்கு வர ஆரம்பித்தார்கள்.

அண்ணா அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணா அவர்கள் பேசும்போது, துப்பாக்கி துண்டுகள் மார்பிலே சாயலாம். அப்படி பாய்கின்ற குண்டுகளால் பின்பக்கம் சாய்ந்துவிடாதீர்கள். முன்பக்கமாக விழுந்து மடிந்தாலும் நம்முடைய வீரம் நிலைநாட்டப்படும் என்று சொன்னார்.

அன்று நடந்த காங்கிரஸ் ஆட்சியிடம் உனிடம் போலீஸ் பட்டாளம் இருக்கலாம். இராணுவம் இருக்கலாம். துப்பாகிகள் இருக்கலாம். குண்டுகள் சீறி பாயலாம் ஆதால் குண்டுகள் தீர்ந்துவிடும், அலை அலையாய் தம்பிமார்கள் வருவார்கள் என குறிபிட்டார்.

மெரினா புரட்சி என்ற சொல்லை உபயோகப்படுத்தியவன் அடியேன் என எல்லோருக்கும் தெரியும். இந்த போராட்டத்தில் மாணவர்கள் ஜல்லிகட்டு வேண்டும் என முழங்கிய போது மெய் சிலிர்த்து போனேன்.

மாணவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் வருங்கால தமிழகம் மேலுள்ள கவலைகள் நீங்கிற்று. போராட்ட களத்தில் தாகத்தோடு இருந்தார்கள், பசியோடு இருந்தார்கள், தாயுள்ளத்தோடு இருந்தார்கள். மாணவர்கள் பசியோடு இருந்தார்கள், முறையாக ஒழுங்குப்பட்டுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எத்தனை போராட்ட களங்களை கண்டாலும், அந்த மாணவர்கள் கட்டுப்பாட்டோடு இருந்து தங்களையே கட்டுப்படுத்திக்கொண்டார்கள். இந்த போராட்டத்தை உலகமே பார்த்தது.

65 போராட்டத்தில் பக்தவட்சலம் முதல் மந்திரி. லட்சகணக்கான மாணவர்கள் இதே நாளில் புறப்பட்டு அடிவயிறு வலிக்க முழக்கமிட்டோம். கடற்கரை சாலைக்குள் நுளையும் போது காவல்துறை குண்டாதடி கொண்டு தாக்கி சின்னாபின்னமாக்கப்பட்டோம்.

முதலமைச்சரே இன்னும் ஜல்லிகட்டுக்கு தடைவந்தால் நிங்கள் பேசாமல் இருங்கள். போலீஸை விட்டு ஏவ கூடாது. ஜல்லிகட்டு தானாக நடக்கும். 

மாணவர் போராட்டத்தில் மாணவர்களை யார் குளப்பியது. யார் பின்னார் இருந்து இயக்கினார்கள். 

மாணவர்கள் போராடியது மாணவர்கள் உரிமை. அவர்களை காவல்துறை ஏன் அப்புறப்படுத்த வேண்டு. ஏன் தாக்க வேண்டும். வாகனம் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் தீ வைத்ததாக வீடியோ ஆதாரம் உலவுகிறது. அவர்களை சஸ்பன்ட் செய்தீர்களா கமிசினர் ஜார்ஜ் அவர்களே. அவர்கள் போலீஸ் இல்லையென்றால் சீருடையில் இருந்தது யார். அவர்கலை கைது செய்தீர்களா?

சர்க்காருக்கு கெட்ட பெயர் உண்டாக்க போலீஸ் செய்தீர்களா, இல்லை வேறு யாருமா? அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கைய பாதுகாக்க போராடி வரும் இயற்கை ஆர்வலர் முகிலனை சுற்றி நின்று தனியாக வைத்து அடித்திருக்கிறீர்களே... தமிழன் நாதியற்றவன் என நினைத்தீர்களா? வைகோ என்ற ஒருவன் இருக்கிறான் மறந்துவிடாதீர்கள். போலீஸை ஒழுங்குப்படுத்துங்கள்.

பிரதமரே நாடாளுமன்றம் கூடுகிறது. காட்சி பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்குங்கள். இதற்கு பிறகும் உச்சநீதிமன்ற நடத்த கூடாதென்றால் நடத்தி காட்டுவோம் தமிழ்நாட்டிலே.

தமிழ்நாட்டு சர்க்கார் ஒன்றும் செய்யகூடாது. உங்கள் ஆட்சியை கலைக்க முடியாது. அதனால் கவலை வேண்டாம். ஜல்லிகட்டு ஆயிரகணக்கான ஆண்டுகளாக எங்கல் உயிரில் கலந்தது. எனவே மாணவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் போக வேண்டாம். எங்கள் கட்சிக்கும் வர வேண்டாம். ஆனால் உங்களுக்கு இன்னல் நேர்ந்தால் நாங்கள் பாதுகாப்போம்.

அருமையான போராட்டத்தை நடத்தினீர்கள். உலகத்திலே இப்படி ஒரு மாணவர் போராட்டம் அறவழியில் அமைதியாக கட்டுப்பாட்டுடன் நடந்திருக்காது. எனவெ ஜல்லிக்கட்டு தடை மீண்டும் வந்தால் ஏழரை கோடி மக்களும் திரண்டு நின்று கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் என்பதை தெரிவித்து விடை பெறுகிறேன் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ மலர் மரியாதை!

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ மலர் மரியாதை!

வடசென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் இடுகாட்டில் இன்று 25-01-2017 காலையில் 10 மணியளவில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி தாளமுத்து நடராசன் தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

தியாகிகளுக்கு மரியாதை செய்த வைகோவை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ அவர்கள், மெரீனா வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு பின்னால் இருிந்த சக்திகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

நடந்த வன்முறைகளுக்கு மாணவர்கள் ஒருபோதும் காரணமல்ல. ஜல்லிக்கட்டு தடை நீங்க முழுக் காரணமும் மாணவர் போராட்டமே,,

தோழர் முகிலன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் என் மீது விழும் அடியாக உணருகிறேன் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

தமிழகத்தின் உரிமை காத்தது மாணவர்களின் மெரினா புரட்சி! வன்முறையில் ஈடுபட்டோர் மீதும், எல்லை மீறிய காவல்துறையினர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்-வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்திய வரலாற்றிலேயே ஒரு இலட்சியத்துக்காக இலட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டு நடத்திய அறவழி அமைதிப் போராட்டம், இதுபோல் இதுவரை நடந்தது இல்லை என்று உச்சிமீது மெச்சத்தகும் விதத்தில் மாணவர்களின் மெரினா புரட்சி தமிழர்களின் ஜல்லிக்கட்டு உரிமையைப் பாதுகாக்க நடைபெற்று, வெற்றியும் ஈட்டியது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாமல் இருந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளும், தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு உரிமையை மதித்து மாநில அரசோடு இணைந்து செயல்பட்டு, சட்ட ரீதியாக தடை நீங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் தமிழர்களின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.

சின்னஞ்சிறு, குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் அறப்போர் களத்துக்கு அழைத்து வந்த பெற்றோர்களுக்கும், தமிழர் பண்பாட்டையும், ஜல்லிக்கட்டின் பெருமையையும், அதற்கு தடைகள் ஏற்பட்ட அநீதியையும் கல்லூரி மாணவ - மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவ -மாணவிகளும் ஆணித்தரமாக எடுத்து வைத்த வாதங்களை தொலைக்காட்சிகளில் கண்டு திகைத்து மெய்சிலிர்த்துப்போனேன்.

தமிழர் நாகரிகம், உரிமைகள் குறித்த உணர்வுகள் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக ஏங்கித் தவித்தேன். அது இன்றைய மாணவர் சமூகத்தில் வளர்ந்திருப்பதை எண்ணி என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. ஆனால், ஆறு நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களை எண்ணி வேதனைப்படுகிறேன்.

அரசின் அறிவிப்பை ஏற்கமாட்டோம். ஜல்லிக்கட்டு தடை நீங்கியது என்ற அரசின் அறிவிப்பை கடந்த காலத்தைக் கருதி ஏற்க இயலாது. சரியான உத்தரவாதம் கிடைக்கும்வரை எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம் என்று கூறுவதற்கும், போராடுவதற்கும் ஜனநாயகத்தில் மாணவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அவர்களை கட்டாயப்படுத்தி பலாத்காரத்தைப் பிரயோகிப்பது, வலுக்கட்டாயமாக காவலர்கள் தூக்கிச் சென்றது நியாயமல்ல. இந்த அறப்போராட்டத்தின் குறிக்கோளையே சிதைக்கும் வகையில், அதன் பெருமைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பிரதமரையும், முதலமைச்சரையும் எழுத்தில் பதிக்க முடியாத அருவருப்பான வார்த்தைகளால் வசைபாடியோரையும், அறப்போர்க் களத்துக்குள் ஊடுருவி வன்முறைக்கு தூபம் இட்டவர்களையும், அவர்களின் பின்னணியிலிருந்து ஏவிவிட்டவர்களையும் தக்க புலன் விசாரணையின் மூலம் கண்டறிந்து, சாட்சியங்களோடு நிலைநாட்டி, அவர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையின் பல வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. சில காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும். ஆனால், அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் காவல்துறையினரே வாகனங்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி வாட்ஸ்அப்பில் ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அந்தக் காவலர்கள் மீதும், தவறு செய்யாத மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீதும் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஆறு நாட்களும் காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் உற்ற நண்பர்களாகவே செயல்பட்டனர் என்பதும், கைகளில் துப்பாக்கியும், லத்திக் கம்பும் இல்லாமல் பல இடங்களில் போராட்டக்காரர்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டியதும் பாராட்டுக்குரியவை ஆகும். ஆனால், வெண்மைத் திரையில் கரும்புள்ளி என ஒன்றிரண்டு சம்பவங்கள் காவல்துறையினரின் நன்மதிப்புக்கு பங்கம் விளைத்தது.

உதாரணத்திற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் மத்தியில் இருந்த தமிழக சுற்றுச் சூழல் வாழ்வுரிமைப் போராளி சகோதரர் முகிலன் அவர்களை பகல் ஒரு மணிக்கு காவல்துறையினர் கைது செய்து, இரவு எட்டு மணி வரை அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று எவரும் அறிய முடியாதவாறு காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று, அலங்காநல்லூர் நடைபாலம் அருகில் 30 காவலர்களை சுற்றி நிறுத்தி வைத்துக்கொண்டு, அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முகிலனை கடுமையாக தடிகொண்டு தாக்கியுள்ளார். காவல்துறையினர் மிகக் கடுமையாக அடித்ததில் கால்களிலும் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், வாடிப்பட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

சகோதரர் முகிலன் அணு உலையை எதிர்த்து இரண்டு ஆண்டுகள் இடிந்தகரையில் அமைதிவழி அறப்போராட்டத்தை நடத்தியவர். ஆற்றுப் படுகைகளில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க இடைவிடாது அறவழியில் போராடுபவர். எனது தலைமையிலான நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராவார். முகிலன் போன்ற அறவழிப் போராளிகளை ஒடுக்கிவிடலாம், அடித்து நொறுக்கினாலும் கேட்பதற்கு நாதி இருக்காது என்று காவல்துறை மனப்பால் குடிக்க வேண்டாம். தோழர் முகிலனைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளரையும், காவலர்களையும்பணியிடை நீக்கம் செய்து, மீது வழக்கு பதிய வேண்டும்.

நடந்து முடிந்த அறப்போரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் இயக்கியவர்கள் அனைவர் மீதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, January 24, 2017

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பேரிடர் விழையும் வகையில், பவானி ஆற்றில் அணைகட்ட முனையும் கேரள அரசின் அநீதியைத் தடுக்க ஜனவரி 27 இல் கோவை மாநகரில் மதிமுக ரயில் மறியல் - வைகோ அறிவிப்பு!

வரலாறு காணாத வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற அவலம் சூழ்ந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு, ராசிமணலில் அணைகளைக் கட்ட முனைந்துள்ளதால், காவிரி டெல்டாப் பிரதேசம் பாலைவனமாகும் ஆபத்து நம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகிறது.

தமிழகத்தின் மாநகரம், நகரங்கள், கிராமங்கள் எங்கும் குடிதண்ணீர்ப் பிரச்சினை மக்களை வாட்டத் தொடங்கிவிட்ட இந்நேரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கே கேடு நேரும் விதத்தில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்ற இடத்திலும், மஞ்சக் கண்டி என்ற இடத்திலும் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் பாடவயல், சீரக் கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் அணைகட்டப் போவதாக அறிகிறோம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணை கட்ட கேரள அரசு முயன்றபோது தமிழக மக்களின் போராட்டத்தாலும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்காததாலும் அந்த முயற்சியை கேரள அரசு கைவிட்டது.

இதன் பிறகு ‘அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம்’ என்ற பெயரில் சிறுவாணி நதியின் குறுக்கே பெரிய அணையைக் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு கேரள அரசு தொடங்கியது.

2016-இல் அத்திட்டத்திற்கான சுற்றுச் சூழல் ஆய்வு அனுமதியையும் மத்திய அரசிடமிருந்து கேரள அரசு பெற்றது. தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதியை திரும்பப் பெற்றது. அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால், தற்போது பவானி ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளைக் கட்ட கேரள அரசு முற்பட்டுள்ளது.

தற்போது சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க முடியாத அளவுக்கு நீர்மட்டம் மிகவும் கீழே போய்விட்டது. அந்த அணையின் உள்பகுதியிலிருந்து பம்ப் மூலம் குடிநீர் பெறுவதற்கும் கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதனால் கோவை மாநகருக்கு சிறுவாணி தண்ணீர் வரவில்லை. பவானி தண்ணீர்தான் பில்லூர் திட்டத்தின் மூலம் கோவை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க உதவுகிறது.

தற்போது பவானியின் குறுக்கே கட்டப்பட இருக்கும் புதிய தடுப்பு அணைகளால் அந்தப் பில்லூர் திட்டத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவையான குடிதண்ணீருக்கும் வாய்ப்பு இன்றிப் போகும் என்பதால், கேரள அரசு தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

மத்திய அரசு இதில் தலையிட்டு, கேரளத்தின் முயற்சியைத் தடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக ஜனவரி 27-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை மாநகரில் இரயில் மறியல் போராட்டம் கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் குகன்மில் செந்தில், நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், தணிக்கைக்குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி, விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

கழகத் தோழர்களும், விவசாயிகளும் அறவழியில் நடக்கும் இந்த இரயில் மறியல் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, January 23, 2017

தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி, வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆளுநர் உரை! வைகோ வரவேற்பு!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் உரிமைகளுக்குப் போராடிய முதல்வர் என்று என்று புகழாரம் சூட்டி இருப்பது பொருத்தமானதே.

தமிழ்நாட்டின் தொன்மை கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணையை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டில் எழுந்த மக்கள் இயக்கம்தான் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு வழி அமைத்தது என்றும், அவசரச் சட்டத்திற்கு மாற்றாக உரிய சட்டத் திருத்தங்களுடன் சட்ட முன்வரைவு உடனடியாகக் கொண்டு வரப்படும் என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யவும், தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைளால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சரியான அணுகுமுறை மேற்கொண்டதால் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கின்றது. அதன் அடிப்படையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய வரி வருவாயில் தமிழகத்திற்கு உரிய நிதிப் பங்கீடு அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு வரி வருவாயில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரி இருப்பது நியாயமானது ஆகும்.

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வறட்சியைத் தமிழ்நாடு சந்தித்துள்ளதால் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 39,595 கோடி ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

வர்தா புயலால் சென்னையில் இலட்சக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து விட்டதால், சுற்றுச் சூழலைப் பேணும் வகையில் தமிழக அரசு சார்பில் மரம் நடும் பெரும் திட்டம் மறைந்த ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

ஈழத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள பேரினவாத அரசைச் சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவம் கைப்பற்றி உள்ள நிலங்களை மீட்டு, தமிழர்களுக்கு மீள் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனதை ஆளுநர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழகம் வந்தாலும், பொது விநியோக முறை பாதிக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

உணவு தானிய விளைச்சலை ஊக்கப்படுத்த 803 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், தமிழ்நாட்டில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது பற்றி ஆளுநர் உரையில் இடம் பெறாததும், தமிழக முதல்வர் அறிவித்த வறட்சி நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கின்றது. மேலும், முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு நான்காயிரம் ரூபாயாக உறுதி செய்ய வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

குடிசைகள் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதற்கான அறிவிப்பும் மதுரை, தூத்துக்குடியில் தொழில் பூங்காவுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

திருப்பெரும்புதூரில் மூடப்பட்ட பன்னாட்டு நிறுவனமான நோக்கியா ஆலையை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் மீண்டும் இயங்கிடச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை சரியானது.

தமிழ்நாட்டை அறிவுத்துறையில் மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றாலும், மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படாதது ஏமாற்றம் அளிக்கின்றது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போன்று தமிழகத்தில் மீண்டும் குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டு வர வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பாராட்டத்தக்கது ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, January 22, 2017

Delete bulls from the other wild animals list-Vaiko Email to PM Modi!

22 January 2017
Dear shri Narendra Modi ji,
Vanakkam.

Sub: Immediate need to promulgate ordinance by the Union Government to delete bulls from the other wild animals list- Reg.

With all sincerity and goodwill I am sending this e-mail letter to you for your kind immediate action to acknowledge the sentiments of Tamils, particularly the student community, cutting across religion and caste, who have distanced themselves from all the political parties of Tamilnadu.

May I draw your kind attention to my representation in person on 15.12.2016 at your office in the 
Parliament House. Yourself gave the privilege to me to explain in detail about Jallikkattu sport which dates back to thousands and thousands of years as a Tamil tradition and culture.


In this Jallikkattu, the bulls are not at all harmed; whereas bulls are killed in Spain in the bull sport, which has been permitted by the Supreme Court of Spain.

Peta and Animal Welfare Board of India have launched an onslaught on the traditional cultural event Jallikkattu and the sentiments of Tamils. That is why, crores and crores of Tamils all over the world demand a ban on Peta, which has its headquarters in Virginia, USA and the Head office in Mumbai, India.

The real culprits in this whole episode are the Congress and DMK, who included the bulls reared in the houses alongwith the wild animals like lion, wolf, leopard, elephant and tiger on 11th July 2011.

On this ground the Supreme Court of India has banned Jallikkattu.

The ordinance promulgated yesterday, i.e. 21st January 2017, by the Governor Tamilnadu, is not 
acceptable to the people of Tamilnadu, particularly millions of students who continue the agitation with discipline and peace, unprecedented in India.


Their apprehension about the future ban on Jallikkattu is justifiable, from the past experience in the Supreme Court. For the first time in the political history of Tamilnadu, not only the students but also mothers with their children, elders with their grand-children continue to participate in the peaceful agitation.

The reasonable question putforth by the people of Tamilnadu, Why not the Union Government promulgate an ordinance immediately to delete the bulls from the list of wild animals?

I am afraid, if immediate steps are not taken by your Government, the resentment of Tamils may turn into wrath and anger against the Union Government.

With all goodwill, I would request you to take immediate action to meet the demand of the Tamils, so that Jallikkattu could be performed without any barrier in the future.

The real culprits Congress and DMK are trying to fish in the troubled waters.

Once again I would place my request to you to satisfy the aspirations of the Tamils, providing a permanent solution to this issue, for which not only the Tamils of Tamilnadu but also Tamils all over the world would be grateful to you.

On this basis, I sent an e-mail to you on 16th January, when you were camping in Gujarat.

It is my duty to bring to your kind attention that the peaceful agitation may take a violent turn, which may cross all the limits, leading to unexpected consequences.

When you took a bold decision on demonitisation like a lightning, I came forward to welcome and 
congratulate your decision. In this serious issue also, I take the privilege of expecting such immediate action from you.


With warm regards,
Yours sincerely,
(Vaiko)


Hon’ble Shri Narendra Modi,
Prime Minister,
Government of India,
New Delhi


Oman MDMK Internet Wing

கொடிய காட்டுவிலங்குகளின் பட்டியலில் இருந்து வீட்டுக் காளை மாடுகளை நீக்கி மத்திய அரசு அவசர சட்ட பிரகடனம் செய்ய வேண்டும்-வைகோ அறிக்கை!

2016 டிசம்பர் 15 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை நான் விளக்கிச் சொல்லிவிட்டு, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011 ஜூலை 11 இல் கொடிய விலங்குகள் பட்டியலில் வீட்டுக் காளை மாடுகளையும் சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தது என்பதால், அந்தப் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்க தேவையான சட்டபூர்வ நடவடிக்கைளை மேற்கொள்ளுங்கள் என்று விவரித்ததோடு, அதனை எழுத்து மூலமாகவும் எனது கோரிக்கை கடிதத்தில் கூறி இருந்தேன்.

இந்த ஆண்டு தைப் பொங்கலிலும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால், ஜனவரி 18 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களுக்கு நான் அனுப்பிய மின்அஞ்சல் கடிதத்தில் 1965க்குப் பிறகு வரலாற்றை திகைக்க வைக்கும் மாணவர் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் அறவழியில் நடைபெறுகிறது. இலட்சோப இலட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்கிறார்கள், எனவே நீங்கள் உடனடியாக கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் ஜனவரி 19ஆம் தேதி அன்று உங்களைச் சந்தித்த போது, தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதாக நீங்கள் கூறி, மத்திய அரசு தற்போது எதுவும் செய்ய இயலாது என்றும், தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறியதை அடுத்து தமிழக அரசு மிருகவதை தடைச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்திருக்கிறார்.

2017 ஜனவரி 21 ஆம் தேதி மாலையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்காக தமிழக அரசின் அவர சட்டத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்த உடன் நான் தமிழக அரசை பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றம் அடுத்து என்ன செய்யும் என்று யூகிக்க இயலாது என்பதையும் குறிப்பிட்டு, கொடிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, இந்தியாவில் மும்பை மாநகரில் தலைமையகம் அமைத்துள்ள பீட்டா அமைப்பும், இந்தியாவின் விலங்குகள் நல வாரியமும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்கவும் கூடும். எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர உத்தரவாதம் இல்லை என்பதால் இலட்சோப இலட்சம் மாணவர்களும், கோடிக்கணக்கான தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டத்தைத் தொடர்வது நியாயமானது.

2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது அன்றைய திமுக அரசு தீக்குளித்த வீரத்தமிழர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தியும், காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டும் அன்றைய போராட்டத்தை நசுக்குவதற்கு பல வழிகளிலும் முயன்றது. ஆனால், இன்றைய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அத்தகைய அராஜக அடக்குமுறையில் ஈடுபடவில்லை.

இன்றைய மாணவர் போராட்டக் களத்திற்கு வெறும் ஜல்லிகட்டு தடை மாத்திரம் காரணம் அல்ல. ஈழத் தமிழர் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக செயல்பட்ட இந்திய அரசு, நாள்தோறும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை வேட்டையாடுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, காவிரி பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த உச்சநீதிமன்ற ஆணையையே உதாசீனம் செய்த மத்திய அரசு, ஷேல் எரிவாயு, மீத்தேன் எரிவாயு, தேனி மாவட்டத்தை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டம், தென்தமிழ்நாட்டையே சுடுகாடாக்கும் அபாயமான கூடங்குளம் அணுஉலை பூங்கா திட்டம், மொழிப் பிரச்சினையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயலும் அநீதி இவை அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக தமிழர்களின் நெஞ்சில் சம்மட்டி அடிகளாக விழுந்து இன்று அமைதி எரிமலையின் சீற்றம் என மாணவர் கிளர்ச்சி வெடித்திருத்திருக்கிறது. தொடரும் மாணவர்கள் போராட்டம் தானாக கலைந்துவிடும் என்று மத்திய அரசு கருத வேண்டாம்.

அனைத்து உலகத் தமிழர்களும் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து பல்வேறு நாடுகளில் குரல் கொடுத்து வருகிறார்கள். எந்த அரசியல் கட்சியினுடைய ஊடுருவலும் இன்றி மகத்தான அறப்போராட்டத்தை நடத்தி வருகின்ற தமிழக மாணவர் சமுதாயம் இதே போன்ற ஒழுங்கையும், அறவழியையும் கடைபிடித்து இந்தியாவின் பிற மாநில மாணவர்களுக்கும், உலக நாடுகளின் மாணவர்களுக்கும் வழிகாட்டும் போராட்டமாகவே தொடர வேண்டும் என வேண்டுகிறேன். இதே கருத்துக்களை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அவசர கவனத்திற்கும் மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பி உள்ளேன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, January 21, 2017

தடை உடைந்தது; வாடிவாசல் திறந்தது! மெரினா புரட்சி வென்றது; இந்தியாவுக்கே வழி காட்டிய தமிழக மாணவர்களைப் பாராட்டுகிறேன்! வைகோ அறிக்கை!

தடை உடைந்தது; வாடிவாசல் திறந்தது! மெரினா புரட்சி வென்றது; இந்தியாவுக்கே வழி காட்டிய தமிழக மாணவர்களைப் பாராட்டுகிறேன்! வைகோ அறிக்கை!

காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,  2011 ஜூலை 11 ஆம் நாள், விவசாயிகள் தங்கள் வீடுகளில் பிள்ளைகளைப் போல வளர்த்த காளை மாடுகளைக் கொடிய காட்டு விலங்குகளின் பட்டியலில் சேர்த்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வந்த ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டை, 2014 மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை செய்ய வழி வகுத்தது.

அதனை எதிர்த்து ஜூலை 19 ஆம் தேதி, தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை, 2016 நவம்பர் 16 இல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு தைப்பொங்கலின்போதும் நடத்த முடியவில்லை. தமிழர்களின் நெஞ்சில் இது பேரிடியாக விழுந்தது.

கந்தகக் கிடங்கில் பொறி விழுந்தது போல், தமிழக மாணவர்கள் , மாணவிகள் இலட்சோபலட்சம் பேர் அறப்போர்க் களம் அமைத்தனர். வாட்டும் குளிரில், நடுக்கும் பனியில், கொளுத்தும் வெயிலில், கொட்டும் மழையில் மெரினா கடற்கரையில் பத்து இலட்சம் பேர், மதுரை தமுக்கம் மைதானத்தில், கோவை சிதம்பரம் பூங்காவில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் எனத் தமிழகம் முழுமையும், மாணவ மாணவிகள் வாடிவாசலைத் திறக்காவிட்டால், வீடு வாசலுக்குச் செல்ல மாட்டோம் என முழங்கினர்.

போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் உள்ளே நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. 

ஒழுங்கையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்தனர். எந்த அசம்பாவிதமும் இல்லாத இப்படியொரு அறப்போராட்டம், இதுவரை இந்தியாவில் நடந்தது இல்லை. 

2016 டிசம்பர் 15 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, இருபது நிமிடங்கள் உரையாடிபோது, 15 நிமிடங்கள் ஜல்லிக்கட்டு பற்றியே விளக்கினேன். பிரதமர் அவர்கள், ‘ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதிப்பதாகவும், தக்க நடவடிக்கை மேற்கொள்வேன்’ என்றும் உறுதி அளித்தார்.

இந்தத் தைப்பொங்கலிலும் ஜல்லிக்கட்டு நடக்காததால், ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் அனுப்பிய மின் அஞ்சல் கடிதத்தில், ‘தமிழக வரலாறு காணாத மாணவர் போராட்டம் வெடித்து விட்டது; அறவழியில் நடக்கின்றது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்காவிட்டால், 65 மொழிப்புரட்சி போல் வெடிக்கக்கூடும்; அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்த முடியாது’ என்று எழுதியதைப் பிரதமர் பார்வையிட்டதாக எனக்குத் தகவல் வந்தது. 

தமிழ்நாடு முழுக்கக் கொழுந்து விட்டு எரிந்த இந்தப் போராட்டத்தைத்  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் உரிய முறையில் கையாண்டு, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.  அதன் அடிப்படையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு தமிழக ஆளுநரால் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

‘ஜனவரி 23 ஆம் தேதி கூடுகின்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில், இது மசோதாவாக முன்வைக்கப்பட்டுச் சட்டமாக ஆக்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கொடிய விலங்குகள் பட்டியலில் சேர்த்த காளை மாடுகளை அப்பட்டியலில் இருந்து நீக்கி, ஜல்லிக்கட்டை நடைபெறுவதை நிரந்தரமாகப் பாதுகாக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். 

இந்தியாவையே உலுக்கிய இந்தப் போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே மாணவர்கள் நடத்தியதாகக் கருத முடியாது. 

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக்குற்றவாளியாகச்  செயல்பட்டதும், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை நாளும் தாக்குவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும், காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக அக்கிரமம் செய்யும் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்தும் கடமையைச் செய்யாததும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தமிழக மக்கள் மீது திணிப்பதும் இவை எல்லாம் தமிழக மக்கள் மனதில், குறிப்பாக மாணவர்கள் மனதில் முள்ளின் மேல் முள்ளாகத் தைத்து, அது மொத்தமாக ஜல்லிக்கட்டுத் தடையில் பெரும் அறப்போராட்டமாக வெடித்தது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்துப் போராடினார்கள்.

இனிமேலாவது, தமிழகத்தின் உரிமைகளை, தமிழ் இனத்தின் தனித்தன்மைகளை நசுக்குகின்ற எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ள போராட்டம்தான், இந்த மெரினா புரட்சி ஆகும். 

உலகத்தின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்த மாணவர் சமுதாயத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாணவர்களை வாழ்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

நாகர்கோயிலில் தொண்டனின் தந்தையை நலம் விசாரித்த வைகோ!

தமிழ் இலக்கியத்திற்கு கருவூலங்களை தந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று 20-01-2017 மாலை 6 மணி அளவில் நாகர்கோயியிலில் குற்றாலம் பிள்ளை மருத்தவமனை எதிரில் அமைந்துள்ள பி.டி.பிள்ளை மண்டபத்தில் வைத்து நடந்தது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களை பாராட்டி பேச வந்திருந்த வைகோ அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் ஜெரோம் ஜெயகுமார் தந்தையாரின் உடல் நலன் அறிந்து, அதை விசாரிக்க அவரின் வீடு தேடி சென்று நலம் அவரின் அருகில் அமர்ந்து நலம் விசாரித்தார். 

உடன் குமரி மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர். தொடர்ந்து ஜெரோம் ஜெயகுமார் அவர்களின் குடும்பத்தாருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஒளிபடம் எடுத்துக்கொண்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

குமரி மாவட்ட மதிமுக நடத்திய நாவலாசிரியர் பொன்னீலன் பாராட்டு விழாவில் வைகோ!

தமிழ் இலக்கியத்திற்கு கருவூலங்களை தந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று 20-01-2017 மாலை 6 மணி அளவில் நாகர்கோயியிலில் குற்றாலம் பிள்ளை மருத்தவமனை எதிரில் அமைந்துள்ள பி. டி.பிள்ளை மண்டபத்தில் வைத்து நடந்தது.

இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பின்னர் தனது உரையில் அவர் தமிழுக்கு தொண்டாற்றியதை எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.

மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் நகர, ஒன்றிய, மாவட்ட, பேரூர், பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி