அண்ணன் எம் எல் எப் ஜார்ஜ் அவர்கள் என் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். தாயகத்தில் அவரது இருக்கைக்கு என்னை அழைத்து சென்று உரையாடிய நாட்களும், அலைபேசியில் பாசமாக பேசிய நாட்களும் பசுமை மாறாமல் இன்றளவும் இருக்கிறது.
வாழ்நாளெல்லாம் தாயகத்திலே பிரதிபலன் எதிர்பாராமல் தாயகம் காத்தவர். பாசத்தின் பிறப்பிடமாக திகழ்ந்தவர்.
நல்ல பாடல் பாடுபவர், வேகமாக தட்டச்சு செய்பவர். தொழிலாளர் முன்னணியிலே சிறந்து விளங்கியதால் அடையாளமாக தன் பெயரிலே எம் எல் எப் என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டவர்.
குடும்பத்தின் மீது மிகுந்த அக்கரை கொண்டு நம்மிடமும் பேசியவர். தன் மகன் ஒரு இசையமைப்பாளர் என்று பெருமைபட்டு சொல்லியதும், தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் பின்னாளில் திருமணம் செய்து கொண்ட அந்த மகன் மகன் பெரிய இசையமைப்பாளர்களுக்கு கம்போஸ் செய்து கொடுத்த பிறகும், அதற்கான ஊதியங்கள் கிட்டவில்லையென்று வருந்தியும் சொன்னது நெஞ்சத்தை கனக்க செய்தது.
அண்ணன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி முகநூலில் இன்று 01-04-2019 கண்டவுடன் அதிர்ச்சியுற்றேன். அண்ணனுக்கே அழைத்தேன். ஒரு பெண்மணி குரல் தழுதழுத்தது. பாசத்தில் ஊறியவர்களாச்சே மதிமுகவினர். ஆதலால் இந்த பக்கமும் நா தழுதழுக்க இரங்கல் கூறிவிட்டு மதிமுக பக்கபலமாக இருக்கும். நான் ஓமனில் இருந்து மைக்கேல் பேசுகிறேன் என்று சொல்லி வைத்தேன்.
அண்ணனே உங்கள் பாதசுவடுகள் தாயகத்தில் பட்ட இடங்கள் உங்களை எங்களுக்கு என்னாளும் நினைவுகூறும். உங்கள் இருக்கையை காணும் போது நினைவுகள் வந்து போகும்.
அண்ணனே ஓடி உழைத்திர்கள். சற்று இளைப்பாறுங்கள்...
அண்ணன் எம் எல் எப் ஜார்ஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment