Tuesday, April 16, 2019

கருப்பு துண்டுக்கு கெளரவம் சேர்த்த வாணி பிச்சையா மறைவுக்கு வைகோ கண்ணீர் அஞ்சலி!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கும் முன்பே தலைவர் வைகோ அவர்களுக்கு முதன் முதலாக கருப்பு துண்டு அணிவித்த பெரியவர் வாணி பிச்சையா அவர்கள் மறைந்தார் என்பது மதிமுகவினருக்கு பேரதிர்ச்சி.

தலைவர் வைகோ அவர்கள் அதன் பிறகுதான் கருப்பு துண்டை தினமும் தனது தோளில் கம்பீரமாக அணிகிறார்.

வாணி பிச்சையா அவர்கள் நேற்று 16-04-2019 சங்கரன்கோயிலில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தலைவர் வைகோ அவர்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.



உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி நிர்வாகிகள், கழக கண்மணிகள் என ஏராளமானோர் இருந்தனர்.

No comments:

Post a Comment