மதிமுக நடத்திய அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாள் மாநாடு சென்னை நந்தனம் YMCA திடலில் செப் 15 ல் நடந்தேறியது. இதில் யஸ்வந்த் சிக்ஹா, முக ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறைவுரையாற்றினார்.
அதில் பேசிய வைகோ அவர்கள், மலேசியாவில் தூக்குத்தண்டனை எதிர்நோக்கிய இராமநாதபுரம் இளைஞர்கள் 12பேரை என் வேண்டுகோளை ஏற்றுக் காப்பாற்றியவர் யஷ்வந்த் சின்கா.
காலையில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நின்றேன்; அதேநாள் மாலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஸ்டெர்லைட்டை எதிர்த்து வாதாடினேன்.
5000 கிலோமீட்டர் நடந்திருக்கின்றேன்; 50000 கிராமங்களுக்குச் சென்று இருக்கின்றேன். தமிழ்நாட்டுக்காக என்னை ஒப்படைத்து இருக்கின்றேன்.
நாங்கள் சாதித்ததை யாரும் சாதிக்கவில்லை. சாதிக்கவும் முடியாது.
ட்ராய் மரக்குதிரை போல, பாஜக, மதம் என்ற மரக்குதிரையில் வருகிறது. உள்ளே விட மாட்டோம்.
இந்தியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தன்னந்தனியனாகப் போராடினேன்.
நான் திராவிட இயக்கப் போர்வாள் மட்டும் அல்ல..திருத்தக்கத் தேவர் வருணித்த சலபதியின் வாளும் நான்தான் என்று பேசினார்.
No comments:
Post a Comment