கோழிக்கோடு வானூர்தி நிலையத்தில் தலைவர் வைகோ அவர்களுடன் கோகுலம் கால்பந்து குழு வீரர்கள் 26-09-2019 அன்று சந்தித்தார்கள்.
இந்தியாவில் கால்பந்து என்றால் வடகிழக்கு மாநிலங்கள்தான் புகழ்பெற்ற கால்பந்து அணிகள். மோகன் பகான்,ஈஸ்ட் பெங்கால் கிளப். ஃபெடரேசன் கோப்பையை இந்த இரு அணிகள் மட்டுமே மாறி மாறி வென்று வந்தன. மற்றொரு அணி முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப். பஞ்சாப் பக்வாரா ஜேசிடி மில்ஸ் சல்கோவ்கர் கோவா கேரளத்தில் கலமசேரி பிரிமியர் டயர்ஸ் ஆகிய அணிகளும் குறிப்பிடத்தக்கவை கிரிக்கெட்டில் ரஞ்சிக் கோப்பையைப் போன்றது கால்பந்தில் சந்தோஷ் கோப்பை. அதில் மாநில அணிகள் மட்டுமே ஆட முடியும் தனியார் அணிகள் ஆட முடியாது. இந்தியாவில் கால்பந்து விளையாட்டு என்றால் மேற்கு வங்காளம் முதல் இடம். அடுத்து கேரளம், மணிப்பூர், மிசோரம். இந்த மாநிலங்களுக்கு அடுத்துதான் மற்ற அணிகள். வடகிழக்கு மாநிலங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் கால்பந்து ஆட்டத்தில் புகழ்பெற்று விளங்குகின்றன. இன்று தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட இந்த அணி வீரர்கள், மோகன் பகான், கிழக்கு வங்காளம் அணிகளைத் தோற்கடித்து கோப்பையை வென்ற அணி. அதை அவர்கள் தலைவர் வைகோ அவரிடம் சொன்னபோது வியப்பு அடைந்தார். தான் ஒரு கால்பந்து ரசிகர் என்பதைக் குறிப்பிட்டார். அப்போது அவர்கள் ஐயா நீங்கள் வாலிபால் ஆடுவதை நாங்கள் பார்த்து இருக்கின்றோம் என்றார்கள்.
No comments:
Post a Comment