ட்ரிப்யூன் ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ரவிசிங் நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர் வைகோ அவர்களைச் இன்று 18-11-2019 மதியம் சந்தித்தார்.
வைகோ சார், மாநிலங்கள் அவையில் பணியாற்றி, இயற்கை எய்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று 18-11-2019 காலை நீங்கள் ஆற்றிய இரங்கல் உரை தனிச்சிறப்பு வாய்ந்தது.
மற்றவர்கள் எல்லாம் ஏதேதோ பேசினார்கள் நீங்கள் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கிச் சொன்னீர்கள். ஆங்கிலக் கவிதை ஒன்றைக் குறிப்பிட்டீர்கள். அதை என்னால் எழுத முடியவில்லை. மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள். நான் எழுதிக் கொள்கிறேன் என்று கேட்டு எழுதிக்கொண்டார்.
வைகோ சார், நான் நீண்ட காலமாக உங்களுடைய ரசிகன். இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்கின்றது என்று கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தலைவருடன் படங்கள் எடுத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment