Sunday, November 24, 2019

நாடாளுமன்றத்தில் வைகோ அறிமுகம் செய்த, சட்ட முன்வரைவு!

இந்திக்கு இணையாக, இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய அரசியல் சட்டம் வழி வகுத்து இருக்கின்றது. உலகின் எத்தனையோ நாடுகளில், பல மொழிகள், ஆட்சிமொழிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, தெற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில், 11 மொழிகள், ஆட்சிமொழிகள் ஆக உள்ளன.
130 கோடி மக்கள் வசிக்கின்ற இந்தியாவில், 454 மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியா, பன்மொழிகள் பேசுகின்ற நாடு; பல்வேறு பழக்கவழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்டது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு, இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஆதரித்து வளர்க்க வேண்டும்; இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழிகள் ஆக்க வேண்டும்.
அதற்காக, இந்தச் சட்ட முன் வரைவை நான் அறிமுகம் செய்கின்றேன்.
குறிப்பு:
இதுகுறித்த விரிவான கருத்துப் பரிமாற்றங்கள், அவைத்தலைவர் ஒதுக்குகின்ற நாளில் நடைபெறும் என 24-11-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment