காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாசிர் அகமது லவாய் மீர்முகமது ஃபயஸ் இருவரும் இன்று 18-11-2019 நாடாளுமன்ற வளாகத்திற்குள் தலைவர் வைகோ அவர்களைப் பார்த்ததும் விரைந்து வந்து சந்தித்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காஷ்மீர் பிரிவினை சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டபோது நாசிர் அகமது லவாய் அதை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்தார். அதற்காக அவரை அவையில் இருந்து குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினார்கள்.
தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது அதைக் கண்டித்துப் பேசினார்கள். அதற்காக லவாய் நன்றி தெரிவித்தார். அப்போது தலைவர் வைகோ அவர்கள், நீங்கள் போராளிகள் நாங்கள் தமிழர்கள் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்போம்.
என் இனிய நண்பர் ஃபரூக் அவர்கள் எங்களுடைய கட்சி மாநாட்டிற்கு வருவதாக ஒப்புக் கொண்டு இருந்தார். அதைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன் என்றார்.
ஆம். அதை நாங்கள் தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டு இருந்தோம் என்று இருவரும் சொன்னார்கள்.
தலைவர் வைகோ அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
ஒரு போராளியான உங்களைப் போன்றவர்களைப் பார்த்துத்தான் நாங்கள் ஊக்கம் பெறுகின்றோம் என்றும் சொன்னார்கள்.
No comments:
Post a Comment