கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமெனக் கருதி கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
Friday, July 28, 2023
கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிடுக. தமிழக அரசுக்கு வைகோ MP வேண்டுகோள்!
நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம். தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும். வைகோ MP வேண்டுகோள்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது.
Thursday, July 27, 2023
இந்திய ஒன்றிய அரசால் நகர்ப்புற ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்கள் என்ன? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கௌஷல் கிஷோர் அவர்கள் அளித்த பதில்!
கேள்வி எண். 402
Wednesday, July 26, 2023
கடந்த ஆறு மாதங்களில் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பதில்!
Tuesday, July 25, 2023
இயக்கத்தின் மூத்த தோழருக்கு உதவிய துரை வைகோ!
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர் ஜெயராமன்.
வந்தே பாரத் இரயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? வைகோ MP கேள்விக்கு இரயில்வே அமைச்சர் பதில்!
கேள்வி எண். 312
Monday, July 24, 2023
மணிப்பூர் இனக்கொலைக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி I.N.D.I.A. கூட்டணி MP க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும், இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி அவர்கள் பேச மறுப்பதைக் கண்டித்தும், I.N.D.I.A. கூட்டணி MP க்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு! வைகோ MP கண்டனம்!
இதற்கு முன்பு மேகேதாட்டு அணை தொடர்பாக ஜூலை 4 ஆம் தேதி துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அணை கட்டுவதற்கு எல்லை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி, அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காணுவதற்கும், அகற்றப்பட வேண்டிய மரங்களை கணக்கீடு செய்வதற்கும், கர்நாடக வனத்துறை சார்பில், 29 துணை வன அதிகாரிகளை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வனக் காப்பாளர் அனில்குமார் ரதன் உத்தரவு பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரு சதுக்கம், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் தலா ஐவர்; பெங்களூரு, வன ரோந்து படை, சாம்ராஜ் நகர் சதுக்கம், பிலிகிரி ரங்கமலை புலிகள் காப்பகத்தில் தலா நால்வர்; மைசூரு சதுக்கம், மலை மாதேஸ்வரன் வன விலங்கு சரணாயலத்தில் தலா மூவர். காவிரி வன விலங்கு சரணாலயத்தில் ஒருவர் என 29 துணை வன அதிகாரிகள் நில அளவீடுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், உடனடியாக சாம்ராஜ்நகர் சதுக்கத்தின் தலைமை வனக்காப்பாளர் அலுவலகத்தில் இப்பணியில் இணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. 2007, பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பில், கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த குறைந்த அளவு நீரைக் கூட கர்நாடகா திறந்து விட மறுக்கிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியும்,தமிழ்நாட்டின் மரபு உரிமையை மீறியும் மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உடனடியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகேதாட்டு அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
24.07.2023
தமிழ்நாடு - புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு. உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையைத் திரும்பப் பெறுக. வைகோ MP அறிக்கை!
பல உயர்நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப் படங்களை வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முன்வைத்த வேண்டுகோள் இதன் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலை இதன் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. காஞ்சி மாவட்ட முதன்மை நீதிபதி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படம் நீதிமன்றங்களில் இடம்பெறக் கூடாது என்ற புதிய போக்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். மற்ற தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தும் ஏற்கதக்கது அல்ல.
எனவே, புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
24.07.2023
Saturday, July 22, 2023
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு!
Friday, July 21, 2023
ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது: சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் பதில்!
Wednesday, July 19, 2023
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ MP உரை!
Tuesday, July 18, 2023
எதிர்கட்சிகள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
எதிர்கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் 17, 18-07-2023 ல் நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். அதில் இதை ஒரு அமைப்பாக உருவாக்கி அதற்கு இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை ஆலோசனையாக தெரிவித்தார்.
அனைவரையும் கலந்து ஆலொசித்து மம்தா பானர்ஜி அவர்கள் சொன்ன I.N.D.IA என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் பேசிய வைகோ MP அவர்கள் ஆளும்கட்சிதான் நரி, எதிர்கட்சி புலி என பேசினார்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு வைகோ MP இரங்கல்!
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
Monday, July 17, 2023
மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தேர்வு. தலைமைக் கழகம் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் - செம்பனார்கோவில் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. சி. சந்திரமோகன் (எ) கொளஞ்சி அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளராகத் (முகவரி : நந்தி தெரு, முடிதிருச்சம்பள்ளி (அஞ்சல்), மயிலாடுதுறை மாவட்டம்; கைப்பேசி எண். 97877-41588) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Saturday, July 15, 2023
செயற்குழு உறுப்பினர் பிரேம் ஜாஸ்பர் மரணத்திற்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை ஆழ்ந்த இரங்கல்!
துடிப்பு மிக்க இளைஞன், தலைவர் வைகோவின் பக்தன் என்று சொல்லலாம். அப்படிபட்ட ஒரு கழக கண்மணிதான் ப்ரேம் ஜாஸ்பர். ஒமான் மறுமலர்ச்சி பேரவையின் செயற்குழு உறுப்பினராக இணைந்து பணியாற்றியவர். இப்ரா என்னும் இடத்திலிருந்து ஏறத்தாள 2 மணி நேரம் பிரயாணம் செய்து ஒமான் கழக கூட்டங்களுக்கு வருபவர். அவர் மட்டுமல்லாது கழக உறுப்பினர்களையும், கழக ஆதரவாளர்களையும் தன்னுடன் அழைத்து வந்து கழக பணியாற்றியவர். ஒமானில் பணி செய்தாலும் ஊரில் செல்லும்போது கழக செயல்பாடுகளில் பங்காற்றியவர்.
மக்கள் நலக் கூட்டணி அமைந்த போது கடைசி கட்ட பிரச்சாரத்திலாவது பங்கேற்க வேண்டுமென்று ஒமானிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்து, கன்னியாகுமரி கூட்டுறவு சங்க தலைவராக இருந்து மறைந்து போன நமது வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் குளச்சல் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது அவருக்கு பிரச்சார அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.
கழக செயல்பாடுகள் குறித்து மிகுந்த அளவில் அளவாவியவர். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவைக்கு பக்க பலமாக இருந்தவர். குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் பள்ளியாடி குமார் அவர்களுக்கு மிக்க நண்பராக அவருடன் பணியாற்றியவர். கடந்த சில வருடங்களாக உடல் நல பாதிப்பில் இருந்தாலும், ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு ஓமான் வந்து தனது பணியை தொடர்ந்தார்.
இன்னிலையில் சில மாதங்கள் உடல் நல முன்னேற்றத்திற்காக, ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள், சில உடலுக்கு ஒவ்வாத பழக்கங்களிலிருந்து மீள வேண்டுமென்று என்று பலமுறை அவரை அன்போடு கண்டித்திருக்கிறேன். ஆனாலும் கடந்த மே மாதம் கழக 30 ஆண்டு விழா தொடக்க விழாவின் போது பேசியபோது சிகிச்சையில் இருந்தாலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாகவே பேசினார். நல்லவிதமாக சிகிச்சை மேற்கொண்டு விரைவில் ஒமான் வாருங்கள் என்று சொல்லி பேசியபோது சீக்கிரம் வந்துவிடுவேன் என்று சொன்னார்.
ஆனால் கல்லீரல் செயல்பாடு மிக மோசமாகி இன்று 15-ஜூலை 2023 ல் அவர் மறைந்தார் என்ற செய்தி எட்டியபோது பேரிடியாக இருக்கிறது. அவர் புகழ் ஒமான் தமிழர் மறுமலர்சி பேரவையில் என்றும் நிலைத்திருக்கும். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
15 ஜூலை 2023
Friday, July 14, 2023
நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும்! வைகோ அறிக்கை!
தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் ஜூலை 15ஆம் தேதி முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன.