துடிப்பு மிக்க இளைஞன், தலைவர் வைகோவின் பக்தன் என்று சொல்லலாம். அப்படிபட்ட ஒரு கழக கண்மணிதான் ப்ரேம் ஜாஸ்பர். ஒமான் மறுமலர்ச்சி பேரவையின் செயற்குழு உறுப்பினராக இணைந்து பணியாற்றியவர். இப்ரா என்னும் இடத்திலிருந்து ஏறத்தாள 2 மணி நேரம் பிரயாணம் செய்து ஒமான் கழக கூட்டங்களுக்கு வருபவர். அவர் மட்டுமல்லாது கழக உறுப்பினர்களையும், கழக ஆதரவாளர்களையும் தன்னுடன் அழைத்து வந்து கழக பணியாற்றியவர். ஒமானில் பணி செய்தாலும் ஊரில் செல்லும்போது கழக செயல்பாடுகளில் பங்காற்றியவர்.
மக்கள் நலக் கூட்டணி அமைந்த போது கடைசி கட்ட பிரச்சாரத்திலாவது பங்கேற்க வேண்டுமென்று ஒமானிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்து, கன்னியாகுமரி கூட்டுறவு சங்க தலைவராக இருந்து மறைந்து போன நமது வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் குளச்சல் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது அவருக்கு பிரச்சார அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.
கழக செயல்பாடுகள் குறித்து மிகுந்த அளவில் அளவாவியவர். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவைக்கு பக்க பலமாக இருந்தவர். குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் பள்ளியாடி குமார் அவர்களுக்கு மிக்க நண்பராக அவருடன் பணியாற்றியவர். கடந்த சில வருடங்களாக உடல் நல பாதிப்பில் இருந்தாலும், ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு ஓமான் வந்து தனது பணியை தொடர்ந்தார்.
இன்னிலையில் சில மாதங்கள் உடல் நல முன்னேற்றத்திற்காக, ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள், சில உடலுக்கு ஒவ்வாத பழக்கங்களிலிருந்து மீள வேண்டுமென்று என்று பலமுறை அவரை அன்போடு கண்டித்திருக்கிறேன். ஆனாலும் கடந்த மே மாதம் கழக 30 ஆண்டு விழா தொடக்க விழாவின் போது பேசியபோது சிகிச்சையில் இருந்தாலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாகவே பேசினார். நல்லவிதமாக சிகிச்சை மேற்கொண்டு விரைவில் ஒமான் வாருங்கள் என்று சொல்லி பேசியபோது சீக்கிரம் வந்துவிடுவேன் என்று சொன்னார்.
ஆனால் கல்லீரல் செயல்பாடு மிக மோசமாகி இன்று 15-ஜூலை 2023 ல் அவர் மறைந்தார் என்ற செய்தி எட்டியபோது பேரிடியாக இருக்கிறது. அவர் புகழ் ஒமான் தமிழர் மறுமலர்சி பேரவையில் என்றும் நிலைத்திருக்கும். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
15 ஜூலை 2023
No comments:
Post a Comment