Saturday, October 3, 2015

மறுமலர்ச்சி பயணத்தை அண்ணா இல்லத்திலிருந்து தொடங்கினார் வைகோ!

மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 03.10.2015 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குவதையொட்டி இன்று காலை காஞ்சிபுரம் சென்ற வைகோ அவர்கள் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அவர்களின் இல்லம் சென்று அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் பெரியார் தூணிலிருந்து தனது மறுமலர்ச்சி பயணத்தை தொடங்கி, தாம்பரம் நகரத்தில் நிறைவு செய்தார்.

செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்த தலைவர் வைகோ அவர்கள், மக்கள் நலன் கூட்டியக்கம் நாளை மறுநாள் கூட்டனியாக பிரகடனப் படுத்தப்பட இருக்கிறது. நாங்கள் ஆட்சிப்பீடத்தற்க்கு வருவோம் என்கிற நம்பிக்கையோடு பயணத்தை காஞ்சி மண்ணிலிருந்து துவக்கியிருக்கிறோம். 


அண்ணாவின் கொள்கைகளை திமுக , அதிமுக பின்பற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக மற்றும் அதிமுக தலைமைகள் செய்த ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம். இரண்டு ஆட்சிகளும் கமிசன் அட்சிதான். சதவிகிதம் மாறிக்கொண்டேஇருக்கிறது அவ்வளவுதான் என கூறினார்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் அரசியல் கூட்டணியாக பிரகடனம்!

மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டமானது 05.10.2015 திங்கள் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறுகிறது. இதில் திரு. வைகோ, திரு. இரா. முத்தரசன், திரு. ஜி. ராமகிருஷ்ணன், திரு. தொல். திருமாவளவன் ஆக்ய தலைவர்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் வாரீர். 

இந்த பொதுக்கூட்டத்துல் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம், அரசியல் கூட்டணியாக பிரகடனப் படுத்தப்பட இருக்கிறது. இதை இன்று காஞ்சியில் வைகோ தெரிவித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

புதுச்சேரி மாநில மதிமுக பொறுப்பாளர் நியமனம்!

புதுச்சேரி மாநிலப் மதிமுக பொறுப்பாளராக திரு.அ.சந்திரசேகரன் அவர்கள் மதிமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கட்சி பணிகளை சிறப்பாக செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கழக கண்மணிகள் திரு.அ.சந்திரசேகரன் அவர்களுடன் இணைந்து கழக பணியாற்றவும் வேண்டுகிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, October 2, 2015

திரு அய்யநாதனின் "ஈழம் அமையும்" நூலை வைகோ பெற்றார்!

சென்னை மைலாப்பூர் கவிகோ அரங்கத்தில் திரு. அய்யநாதன் அவர்கள் எழுதியுள்ள "ஈழம் அமையும்" என்ற நூல் வெளியிடும் விழா நடந்தது. 

தலைவை வைகோ சரியாக வந்துவிட்டார், பின்னர் வந்த பழ நெடுமாறன் அவர்களை வைகோ எழுந்து நின்று வரவேற்றார்.

திரு.ஆவல் கணேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நூல் வெளியிடப்பட்டது. இந்த "ஈழம் அமையும்" என்ற நூலை திரு.பழ நெடுமாறன் அவர்கள் வெளியிட மதிமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூல் மதிப்புரை வழக்கறிஞர் பானுமதி அவர்கள் பேசும்போது, மக்களின் உண்மையான பிரதிநிதிகள் ஐயா நெடுமாறன் ஐயா வைகோ ஆகியோர்தான். மக்களை ஒருங்கிணைத்து ஈழம் பெற முயற்சிக்க வேண்டும் என பேசினார். 

ஊடகவியலாளர், உணர்வாளர் டி.எஸ்.எஸ்.மணி அவர்கள் பேசினார். பேராசிரியர் ராமு.மணிவண்ணன் அவர்கள் பேசும்போது, ஒரு பொருளாதாரப் போரை தமிழகத்தில் முன்னெடுப்போம் என்றார். 

எந்த கூட்டணியில் இருந்தாலும் தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தமிழீழ விசயத்தில் என்றும் இலக்கை நோக்கியே பயணிப்பார்,அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் தவற விட மாட்டார் என்ற முழு நம்பிக்கையே அவரை வித்தியாசப் படுத்தி காட்டுகிறது. அதுதான் தலைவர் வைகோ. வெற்றி பெற்ற அநீதியை விட தற்காலிகமாக தோல்வி அடைந்த நியாயமே மேலானது என முடித்தார் திரு.ஜென்ராம்.

அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார். ஐயா பழ.நெடுமாறன் உரை நிகழ்த்தும்போது, மாணவர்களுக்கான நூல் இது எனவும் இந்தியாவின் இரட்டை நிலையையும் இதில் விளக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

தலைவர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது, ஈழ விசயத்தில் இந்தியா கூட்டுக் குற்றவாளி என்பதை விளக்கினார். 2009 மே 13ல் துவாரகா போரிட்டு கொண்டிருந்த போது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாததால் இறந்து போனார்கள். இதை இங்கு பதிய வைக்க வேண்டும் என சொல்கிறேன் என தலைவர் வைகோ பேசினார்.

பிரபாகரன் அவர்கள் எரிமலையாக இருந்தாலும் மனிதநேயத்தில் பனிமலை போன்றவர். சுனாமி பேரழிவிலிருந்து சிங்களர் தமிழர் என பிரித்து பார்க்காமல் உதவிகள் செய்தனர். இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் பேசியதையும் தலைவர் வைகோ நினைவு கூர்ந்தார்.

நல்ல நூலை எழுதிய அய்யநாதன் அவர்களுக்கு தலைவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பழ நெடுமாறன் தலைவை வைகோ ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்