Saturday, October 3, 2015

மறுமலர்ச்சி பயணத்தை அண்ணா இல்லத்திலிருந்து தொடங்கினார் வைகோ!

மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 03.10.2015 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குவதையொட்டி இன்று காலை காஞ்சிபுரம் சென்ற வைகோ அவர்கள் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அவர்களின் இல்லம் சென்று அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் பெரியார் தூணிலிருந்து தனது மறுமலர்ச்சி பயணத்தை தொடங்கி, தாம்பரம் நகரத்தில் நிறைவு செய்தார்.

செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்த தலைவர் வைகோ அவர்கள், மக்கள் நலன் கூட்டியக்கம் நாளை மறுநாள் கூட்டனியாக பிரகடனப் படுத்தப்பட இருக்கிறது. நாங்கள் ஆட்சிப்பீடத்தற்க்கு வருவோம் என்கிற நம்பிக்கையோடு பயணத்தை காஞ்சி மண்ணிலிருந்து துவக்கியிருக்கிறோம். 


அண்ணாவின் கொள்கைகளை திமுக , அதிமுக பின்பற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக மற்றும் அதிமுக தலைமைகள் செய்த ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம். இரண்டு ஆட்சிகளும் கமிசன் அட்சிதான். சதவிகிதம் மாறிக்கொண்டேஇருக்கிறது அவ்வளவுதான் என கூறினார்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment