திலீபன் அழைப்பது சாவையா! இந்த சின்ன வயசில் இது தேவையா என உணர்ச்சி பொங்க பாடினாரே தமிழீழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், திலீபனுக்காக அந்த கவிதை வரிகளை பெற்று தந்தாரே 1987 ஆம் வருடம் அதன் நினைவால் வாடும்போதே அதற்கு அடுத்த வருடம் 1988 ஆம் வருடம் செப்டம்பரை அடுத்த அக்டோபர் திங்கள் 18 ஆம் நாளில்தான் தீபன் பிறந்தார்.
தமிழீழ மக்களின் விடியலுக்காக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலையிலே உயிரை மாய்த்தானே அதே உணர்வால்தான் இந்த தம்பிக்கு தீபன் என்றும் அவருடைய சகோதரருக்கு திலீபன் பெயர் சூட்டபட்டுவிட்டது.
ஒரு திலீபன் காவியமானான். இரண்டு திலீபன்கள் உருவெடுத்தார்கள். தமிழீழ கொள்கையை தன் வாழ்நாளெல்லாம் தாங்கி பிடித்திருக்கின்ற கொள்கை தலைவன் ஈரெழுத்து மந்திரம் வைகோ என்னும் காவலனை தமிழீழ லட்சியத்திற்காக கரம் பிடித்தார்கள்.
தம்பி தீபன் தமிழ் மீதும், தமிழீழம் மீதும் பிறப்பாலே பற்றுக்கொண்டவர். அதை தனது கொள்கையாகவே கடைபிடிப்பவர். அவர் கண் முன்னே நிழலாடும், வரலாற்று சுவடுகளை அவ்வப்போது நமது முகத்திரையிலும் வெளிச்சம் போட்டு காட்டி நினைவூட்டுபவர்.
மறுமலர்ச்சி திமு கழகத்தின் இணையதள வித்தகர், உடுமலைபேட்டை மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர், ஈடிணையில்லா நட்பிற்கு நாணயமானவர். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில், பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment