கோவை மாநகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து, இன்று 16.10.2015 வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு கோவை டாடாபாத் மின்சார வாரிய அலுவலகம் அருகில் மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஎம் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ சார்பில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம்,விசிக சார்பில் சுசி. கலையரசன் மற்றும் ஏராளமான மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment