Wednesday, October 28, 2015

கவிக்கோ விழாவில் வலைதளத்தை திறந்துவைத்தார் வைகோ!

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 28-10-2015 நேற்று நடந்த கவிக்கோ பவள விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் www.kavikko.com என்ற வலைதளத்தை தனது பொற்கரங்களால் துவங்கி வைத்தாா். அதற்கு முன்னதாக கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து வாழ்த்தினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய தமிழின முதல்வர் வைகோ அவர்கள், சேக்கிழார் இளங்கோ. இப்போது கவிக்கோ. என்று பேசினார். எனக்கு தோல்வி ஏற்படும் போதெல்லாம் கவிக்கோவின் வரிகளை துணைக்கு அழைப்பேன் என்றார்.

ஊழல் இருளில் இருந்து தமிழகம் விடுதலை பெற, மதுவிலிருந்து தமிழகம் விடுதலை பெற, கவிக்கோ நீங்கள் உதவுங்கள் எனவும் கோரிக்கை வைத்தார் வைகோ.

மேலும் பேசிய தலைவர் கவி நடையில்,

‪நான்‬ புன்னகையை எடுத்து வைத்தேன்-வானம்
வைகறையை எடுத்து வைத்தது.

நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்-வானம்
மழையை எடுத்து வைத்தது.

நான் வியர்வைத் துளிகளை எடுத்து வைத்தேன்-வானம்
நட்சத்திரங்களை எடுத்து வைத்தது.

நான் தூபத்தை எடுத்து வைத்தேன்-வானம்
நான் வெய்யிலை எடுத்து வைத்தது.

நான் காதலை எடுத்து வைத்தேன்-வானம்
நிலவை எடுத்து வைத்தது.

நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்-வானம்
மேகங்களை எடுத்து வைத்தது.

நான் எழுத்தை எடுத்து வைத்தேன்-வானம்
மின்னலை எடுத்து வைத்தது.

நான் பேச்சை எடுத்து வைத்தேன்-வானம்
இடியை எடுத்து வைத்தது.

நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்-வானம்
இருளை எடுத்து வைத்தது.

நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்-வானம்
மேகங்களை எடுத்து வைத்தது.

நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்-வானம்
புயலை எடுத்து வைத்தது.

‎சரிக்கு‬ சரியாக இருக்கிறது-இனி
இலட்சியங்களை நோக்கி என் பாதங்களை எடுத்து வைத்தேன்-வானம்
தோற்று போனது.

என கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நிகழ்ச்சியில் தலைவர் வைகோ பேசியதும் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

தலைவர் பேச்சு முடிந்ததும், தலைவரின் எழுச்சி உரையை கவிக்கோ பாராட்டினார்.

இந்த நிகழ்வில் தலைவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் பேசிய அண்ணன் திருமாவளவன் பவள விழா வாழ்த்துரை வழங்கும்போது, கவர்ச்சியின் பின்னால் இந்த சமூகம் ஓடுகிறது. தமிழ் அறிஞர்களை மதிக்க மறுக்கிறது. நான் கலங்கி நின்றபோது முன்பு துணை நின்றவர் கவிக்கோ. இப்போது வைகோ என்றதும் கூட்டம் கல ஒலியில் நனைந்தது. 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேசும்போது, பேச்சாற்றலை அண்ணன் வைகோ அவர்களிடமிருந்தே கற்று கொண்டேன் என்று சொல்லி தலைவர் வைகோவை பெருமைப்படுத்தினார்.

இன்றைய அரசியலை சாடிய துறைமுக தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பழ.கருப்பையா அவர்கள், காலம் பொக்கையாக இருக்கிறது. ஒரு உணர்வும் இல்லை. அன்று அப்பர் செய்ததை பின்னாளில் பெரியாரும் அண்ணாவும் செய்தார்கள். பிழைக்க வழி வேண்டும் என்றால் எல்லோரும் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். இன்றைய அரசியலில் மாற்று கட்சி தலைவர்கள் சந்திக்க வேண்டுமென்றால் திருட்டுதனமாகத்தான் சந்திக்க வேண்டி இருக்கிறது. கோவில் உண்டியல் பணத்தில் மந்திரிக்கு எல்லாம் பங்கு இருக்கிறது என பேசினார்.

செய்திகள் சேகரிப்பு: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment