Monday, October 26, 2015

நவம்பர் 1ல் மதிமுக இணையதள அணி கலந்தாய்வு தாயகத்தில்!

ஓமன் மதிமுக இணையதள அணி மற்றும் பிற நாட்டு மதிமுக இணையதள அணி நண்பா்களே! வணக்கம்!

மதிமுக மாநில இணையதள அணி நண்பா்கள் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற டிசம்பா் மாதம் 13-ம் தேதி நம் தமிழின தலைவா் வைகோ அவா்களின் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த நிகழ்வை நாம் எவ்வாறு முன்னெடுப்பது எவ்வாறு சிறப்பாக நடத்துவது, உள்ளிட்ட பல பணிகளை பற்றி நாம் அனைவரும் ஒன்றினைந்து கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்நிகழ்வில் விடுமுறைக்கு சென்றிருக்கின்ற நமது ஓமன் மதிமுக இணையதள அணி நண்பா்கள் மற்றும் பிற நாட்டு மதிமுக இணையதள அணி நண்பா்கள், வாய்ப்பிருந்தால் தாயகத்தில், மற்ற இணையதள அணி நண்பர்கள் அனைவரையும் சந்தித்து, நிகழ்வில் கலந்துக் கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆகவே வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.



மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment