கொங்கு மண்டலத்தில் தமிழீழத்தை தாங்கிய பெயரை தனது விருப்பமாக கொண்டதால், தமிழீழத்தில் மேலுள்ள தீராத தாகத்தால் தமிழீழ சோமு என்று அழைக்கபடும் சகோதரர் ஒரு கொடி காக்கும் குமரனாவார்.
கழக கொடி எங்கெல்லாம் சிதிலமடைகிறதோ, எங்கெல்லாம் வெறுமனே கொடிக்கம்பங்கள் அனாதைகளாக காட்சியளிக்கிறதோ, எங்கெல்லாம் பழையதாகிவிட்டதோ அங்கெல்லாம் சென்று தனது சொந்த செலவில் நம் கழக மதிமுக கொடியான சிகப்பு கறுப்பு சிகப்பு கொடியை ஏற்றி மரியாதை செய்துவிட்டு செல்வார்.
வெளியூருக்கு சென்றாலும் கொடிகளை கட்ட மறப்பதில்லை. தனது மகிழுந்தில் எங்கு சென்றாலும் கழக கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டேயிருக்கும்.
இப்படிபட்ட கொடிகாக்கும் குமரன்கள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்களாக இருப்பதால்தான் மாணவர்கள் கழகத்தில் விழிப்புடனே திராவிட இயக்க கருத்துப்பட்டறையிலும், கழகத்திலும் இணைந்துகொண்டேயிருக்கின்றனர்.
சகோதரரின் அன்பை கண்டு வியப்படையலாம். அனைவரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர். அவர் கழகத்துல் உயர் நிலையை அடையவும், வாழ்வாங்கு வாழவும், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment