குவைத்தில் திருநாட்டில் குவைத் தமிழர் மறுமலர்ச்சி பேரவை - மதிமுக - வைகோ பாசறையின் சார்பாக, அறிஞர் அண்ணா வின் 107 ஆவது பிறந்தநாள் விழா, மிர்காப் நகரில் மானுன் சல்வா உணவகத்தில் ஈட்டி முனை இளமாறன் அரங்கத்தில். நாள் 24:09:2015. வியாழன் மாலை 0.5.00 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
பாசதலைவன், தமிழ்நாட்டின் ஊழியன், தமிழர்களின் தற்காபு கேடயம், மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் கொள்கைகளை கடந்த 23 ஆண்டுகளாக, பின்பற்றி செயல்படுத்திக்கொண்டிருக்கும், வைகோவை வார்த்தையால் போற்றாமல் உள்ளத்தால் போற்றிக்கொண்டிருக்கும் அண்ணன் அரிமா பின்னலூர் மு மணிகண்டன் அவர்கள் குவைத்திலே இந்த அண்ணா பிறந்தநாள் விழா நடத்த வேண்டுமென்று ஆலோசித்து வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார்கள். அண்ணன் அவர்களுக்கும், ஒத்துளைத்த தோழர்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த சிறப்பு வாய்ந்த வளைகுடா நாட்டில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில்,
ஆலோசகர், பெரம்பலூர் அ.அசன்முகமது. தலைமை தாங்கினார். விருதுநகர் சுப்ராஜ்.வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னிலையாளர்கள்.
பெரம்பலூர்.பெரு.சீனிவாசன். செயலாளர்.
நக்கம்பாடி முகமது அலி துணை.செயலாளர்.
வி.கிருஷ்ணமூர்த்தி. வரதராஜன்.காந்தி.வெள்ளைசாமி..
நிகழ்ச்சி தொகுத்தவர்.
.கவிஞர்
வடலூர்.கோவி.தண்டாயுதபாணி. தலைவர்.
பெரியார் படம் திறப்பாளர்.
பொறியாளர். ச.மணிவாசகம்.
அறிஞர் அண்ணா படம் திறப்பாளர்.
கலிங்கப்பட்டி க.கனகராஜ்.பொருளார்.
வாழ்த்துரையாளர்கள்.
முத்து ராஜ் கலிங்கம்பட்டி.
ராதகிருஷ்ணன். சாத்தூர்.
சுந்தரராஜ் சுப்பிரமணியபுரம்.
ஜெயக்குமார்.விருதுநகர்.
ராயின்சன் கன்னிய குமாரி.
மோகன் நெய்வேலி.
கணபதி கோவில் பட்டி.
பழனிசாமி சிதம்பரம்.
செல்வக்குமார் விருதுநகர்.
வரதராஜ் பெருமாள் விருது நகர்.
இராஜேந்திரன் ராஜமன்னார்குடி.
இதில் சிறப்பு என்னவென்றால், தலைவரின் முன்னாள் வாகன ஓட்டுநர் முத்து ராஜ்.சங்கரன் கோயில் அவர்களும் கலந்துகொண்டார்கள். மேலும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
குவைத் மதிமுக வைகோ பாசறையின் அமைப்பாளர் அண்ணன் அரிமா பின்னலூர் மு மணிகண்டன் சிறப்புரையாற்றி வந்தவர்களின் செவிகளுக்கு விருந்தளித்தார். விளாத்திகுளம் த.செல்வக்குமார் அவர்கள், நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியின் மகுடம் சூட்டுகின்ற தீர்மானத்தினை ஆலோசகர், பெரம்பலூர்.அ.அசன்முகமது அவர்கள் வாசித்தார்கள். தீர்மானம் பின்வருமாறு,...
தீர்மானம். 1.
★திருப்பூர் மதிமுக வின் மாநாட்டை மிக பிரமாண்டமாக வடிவுமைத்து வரலாற்று வெற்றிக்கு மகுடம் சூட்டிய அன்பிற்கினிய அண்ணன். ஆர்.டி.மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றியையும் பாராட்டுக்களையும் இப் பாசறை தெரிவித்துகொள்கிறது.
தீர்மானம். 2.
★திருப்பூர் மதிமுக வின் மாநாடுக்கு வருகை தந்து உலக தமிழர்களின் வியக்கும் வகையில் பெருமை சேர்த்து தந்தும் உலக தமிழர்களின் தனி தேச கணவாக தனி தமிழீழத்தை வென்றடுக்க போராடும் தமிழின தலைவர் வைகோ அவர்களின் வழியில் தனி ஈழத்தை வென்று எடுப்போம் என்ற இலட்சியவாதி அய்யா பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு இப் பாசறை நெஞ்சர்ந்த நன்றியையும் தன் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம். 3.
★தமிழினதலைவர் வைகோ அவர்களின் மாநாட்டு பிறகடனம் கழகத்தின் தோழர்களை விழிப்புணர்வுப்படுத்தியும் நம் அனைவரையும் வளுமையாக சாத்தியபடுத்தி நம் கழகத்தை பாதுகாக்கும்.தமிழினத்தின் முதல்வர் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்களோடு பாசத்துடன் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறோம்.
தீர்மானம். 4.
★மதிமுக வின் கிளை கழகம். ஊராட்சி வட்டம்.ஒன்றியம். மாவட்டம். மாநகரம் .பகுதிகளிள் உள்ள நம் கழகத்தின் செயலாளர்கள் தோழர்கள் கிராமம் மக்களிடம் தாய்மார்களிடமும் தலைவரின் புகைப்படம். நமது சின்னம் பம்பரம் த்தையும். எடுத்து சென்று நம் தலைவர் நாட்டு மக்களுக்கு செய்த நற்பணிகளின் சாதனைக்களை விளக்கி வரும் தேர்தல் குள் விழிப்புணர்வுகளை நாம் எற்படுத்த வேண்டும் என்று நம் பாசறை நம் கழகத்தின் கண்மணி க்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம். 5.
★தமிழனின் வாழ்வாதாரம் எங்கு எல்லாம் பாதிப்பு எற்படுத்தும் வகையில் இருக்கிறதோ. நம் உயிர் முச்சயான விவசாயத்தை அடியோடு அழிக்கும் மீத்தேன் எரிவாயு போன்றவற்றை தமிழகத்தில் இருந்து விரட்டி அடித்து தொடந்து போராடுவதர்க்கு நம் இளைஞர்கள் முன்னுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் மக்கள் எங்கெல்லாம் வஞ்சிக்க படுக்கிறார்களே அங்கெல்லாம் நம் கழகத்தின் தோழர்கள் மிக வேகமாக போராடி வருக்கின்றன வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்கு நமக்கான இடத்தை மக்களிடம் நாம் சென்று அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டிய வேலையை நாம் இப்போது தொடங் வேண்டும் என இப்பாசறையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நாட்டு மக்களின் நலன் கருத்தில் கொண்டு மதுவிலக்கு போராட்டம் நடத்திய கலிங்கப்பட்டியில் அம்மையார் அவர்களை இப்பாசறை வாழ்த்துக்களோடு வணங்குக்கிறது.
தீர்மானம். 6.
★நமது கழகத்தின் உள் காட்சி தேர்தலுக்கு நாம் அனைவரும் நம் ஒத்துழைப்பை நல்லக வேண்டும் .. நம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் மீண்டும் மறுமலர்ச்சி பயணம் மிகசிறப்பாக வெற்றி பெற அங்கு. அங்கே இருக்கும் நம் கழகத்தின் கண்மணிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என பாசறை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம். 7.
★நம் கழகத்தின் தோழ்களும் கண்மணி கள் அனைவரும் . வரும் சட்ட மன்றத்தின் தேர்தல் காலத்தை அதன் நிலைப்பாட்டை நம் அனைவரும் மனதில் கொண்டு. தேர்தல் பரப்புரைக்களை இப்போதே தொடங்க வேண்டும். அதர்காண பணியின் சுமைக்களை நாம் நேரம். காலம் பார்க்காமல் நம் செயல் ப்பட்டை தொடங்கவேண்டும். தமிழகத்தில் அனைத்து இடத்திற்க்கும் நம் தலைவர் வைகோ அவர்கள் செல்ல சத்திய படதவகையில் தலைவரின் உடல் நலனை நாம் மனதில் கொண்டு நம் கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களையும். மாவட்டகழகத்தின் நிர்வாகிகளையும் நம் தோழர்கள் நம் மக்களிடம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என குவைத் வைகோ பாசறை தோழர்களின் கனியோடு அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment