மூடு டாஸ்மாக் மூடு பாடல் பாடிய, மக்கள் கலை இலக்கிய கழகத்தின், மைய கலைக்குழுவை சார்ந்த கோவன் அவர்களை, திருச்சியில் நள்ளிரவில் 2 மணி அளவில் சென்னை குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 124ஏ தேசதுரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் எங்குள்ளார் என்பதை தெரிவிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகாரம் சார்பாக மூடு டாஸ்மாக மூடு என்ற பாடல் பாடி மக்களுக்கு மதுவின் கொடுமைகளை விழிப்புணர்வு பாடலாக வெளியிட்டார்கள். இந்த பாடலில், மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக்கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம் என்ற இரண்டு பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதற்காக மக்கள் பாடகர் தோழர்.கோவன் அவர்களை தமிழக அதிமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. இதை ஓமன் மதிமுக இணையதள அணி வன்மையாக கண்டிக்கிறது. அவர் பாடிய பாடல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனனாயகத்தை அடியோடு அழிக்கின்ற செயல்களில் ஜெயா அரசு ஈடுபட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மக்களின் மீது ஏதேச்சாரமாக தமிழக அரசு நடந்துகொள்கிறது கண்டிக்கதக்கது. சொந்த மாநில மக்களையே கொடுமைபடுத்தும் நிலமை கேவலமான செயலாகும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் இனியும் ஜெயா அரசு ஈடுபடகூடாது எனவும் ஓமன் மதிமுக இணையதள அணி கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment