மது போதையிலிருந்து தமிழகத்தை காத்திட, லஞ்சம் லாவண்யமற்ற அரசு அமைத்திட, தமிழக நீர்நிலைகளை காத்திட, விவசாயம் செழிக்க, சிறந்த கல்வி கிடைக்க, மருத்துவம் சிறப்பாக செயல்பட உள்ளிட்ட அனைத்து வாசகங்களையும் உள்ளடக்கிய துண்டு பிரசுரத்தை அச்சிட்ட மதுரை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருமை சகோதர நேதாஜி கார்த்திகேயன்.BBA அவர்கள், மதுரையை சுற்றியுள்ள அனைத்து கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களிடத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மாவட்டம் முழுதுமாக சுற்றுபயணம் போல சென்று மாணவர்களிடத்தில் நேரம் கிடைக்க கலந்துரையாடுவதும், துண்டு பிரசுரம் மூலமாக தலைவரின் பணிகளை எடுத்து செல்வதும், வருகிற தமிழக 2016 தேர்தலில் மாணவர்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் விளக்கியும் வருகிறார். மதுரையை முடித்த பின்னர் தமிழகம் முழுதும் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார். அவருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை சமர்ப்பிப்பதோடு, மேலும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாணவ செல்வங்களே!
வருகிற தேர்தலில் தமிழகத்தை காக்க, உங்கள் எதிர்காலம் வாழ்வடைய, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திட, குறிப்பாக உங்கள் அனைவரது வாழ்வும் எதிர்காலத்தில் சிறப்பாக அமைய மதிமுக வில் சேருங்கள். தலைவர் வைகோவை அரியணையில் அமர வைப்போம். வெற்றியை கொண்டாடுவோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:
Post a Comment