கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று 22-10-2015 வருகை தந்தார். வருகிற போது குமரி மாவட்ட எல்லையான காவல் கிணறு பகுதியில் குமரி மாவட்ட கழக தொண்டர்களின் பிரமாண்ட வரவேற்பில் பிரம்மித்தார்.
வழி நெடுக பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் என காவல் கிணறு முதல் இலவு விளை வரை செய்திருந்தனர். இதில் 42 பிளக்ஸ் போர்டும், 50 சுவர் விளம்பரமும், 600 கழக கொடிகளையும் கழக பொத்க்குழு உறுப்பினர் ஆனந்த ராஜன் அவர்கள் சொந்த செலவில் செய்திருந்தார். இதே போல பல கழக தொண்டர்களும் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர்.
இலவு விளை கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பொன்.ராம கிருஸ்ணன் இல்ல திருமன விழாவில் செல்லும் வழியில், மார்த்தாண்டத்தில் குழுத்துறை ஜெயராஜ் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட அப்பாவு நாடார் டெக்ஸ்டைலை திறந்து வைத்து உரையாடினார்.
மேலும் போகிற வழிகளில் கழக கொடிக்கம்பில் கொடியேற்றினார். பின்னர் திருமண நிகழ்விற்கு சென்றார்.
கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பொன்.ராம கிருஸ்ணன் இல்ல திருமன விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் அரவிந்த் மற்றும் அகிலா ஆகியோரை வாழ்த்தி பேசினார்.
அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், தமிழகத்தில் 35 சதவீத மக்கள் தான் கட்சிகளை சார்ந்தவர்கள். மீதி 65 சதவீத மக்கள் கட்சி சார்பற்ற மக்கள். இந்த 65 சதவீத மக்கள் அதிமுக திமுகவுக்கு மாற்று வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மதிமுகவால் தான் தர முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். 2016 இல் மக்கள் நல கூட்டியக்கம் மாற்றத்தை உருவாக்கும் இயக்கமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment