2016 சட்டமன்றத் தேர்தல் அணுகுமுறை குறித்து, மக்கள் நலக் கூட்டியக்கத்தின் குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கை இறுதி செய்தல் கூட்டம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் வைகோ அவர்கள் அளித்த பேட்டியில், மத்திய அரசின் மற்றும் மாநில அரசின் போக்கை கண்டித்தும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல் கண்டித்து வருகிற 31 தேதி திருச்சியில் மக்கள் நலன் கூட்டியக்கம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
நவம்பர் 3 அன்று விலைவாசி உயர்வை கண்டித்து அனைத்து தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், நவம்பர் 25 ம் தேதி குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை விளக்கும் விதமாக விளக்க கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளதாகவும் அறிவித்தார்.
மேலும், மக்கள் நலன் கூட்டியக்கத்தின் தேர்தல் அணுகுமுறை நவம்பர் 2 ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment