பெரம்பலூரில் மாவட்ட அமைப்பாளர்கள் & கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஞாயிறு 4-10-2015 அன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை மாணவர் மன்றத்தில் சேர்க்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தலைவர் வைகோ அவர்களின் கரம் பற்றி வீர நடை போடும் இளம் வயதுடைய மாணவர் மன்றத்தினர் கல்லூரிகளில் மாணவர் மன்றத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றியும், புதிய மாணவர்களை சேர்ப்பது குறித்தும் அவர்களின் கருத்துக்களில் ஆழ்ந்த அறிவும், உறுதியும், முதிர்ச்சியையும் காணும்போது வியப்பாக இருந்தது.
2016 தேர்தலில் தங்களின் களப்பணியின் பங்களிப்பையும் ஒவ்வோருவரும் எடுத்துரைக்க தவறவில்லை. காலை தொடங்கி மாலை முதல் நடந்த நிகழ்வு எதிர்காலம் வைகோவின் காலம் என்று உணர்த்தியது.
மாநில மாணவரணி செயலாளர் அண்ணன் தி.மு.இராசேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில், மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் இலட்சிய சகோதரர் சசிகுமார் உள்ளிட்ட மாணவர் மன்றத்தினர் இந்நிகழ்வை அனைவரும் பாராட்டும் விதமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment