தலைவர் இன்று திருவைகுண்டம் அணையை புனரமைப்பது தொடர்பான வழக்கிலும்,காவிரிப் படுகையில் செல் கேஸ் எடுப்பது தொடர்பான வழக்கிலும் ஆஜராகி வாதாட சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கத்தில் அமைந்துள்ள பசுமைத் தீர்ப்பாயத்திற்கு காலை 9:50 க்கு வந்தார்.
பின்பு செல் கேஸ் தொடர்பான வழக்கு முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் சார்பில் தலைவரும்,பி.ஆர்.பாண்டியன் அவர்கள் சார்பில் தனித்தனி வழக்குகள் தொடுக்கப்பட்டது.பின்னர் இந்த வழக்கு Nov 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ஐந்தாவது வழக்காக திருவைகுண்டம் அணை வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் அய்யா நல்லகண்ணு அவர்களும் கலந்து கொண்டார்கள்."மணல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்கப்படுகின்றது.இது நீங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது "
பின்னர் அரசுத் தரப்பும்,ஒப்பந்தக்காரர் தரப்பும் தங்கள் தரப்பு வாதத்தில் "அதற்கென்று தாங்கள் ஒரு குறிப்புப் புத்தகம்(Log book) வைத்துள்ளோம்.அதை நாங்கள் கண்காணித்து வருகின்றோம்" என்றனர்.அடுத்து அய்யா நல்லகண்ணு அவர்கள் "மணல் கொள்ளை நடைபெறுகின்றது.அதைத் தடுக்க வேண்டும்.மக்களுக்கு அவர்கள் காசு கொடுத்து மணலை எடுத்துச் செல்கின்றனர்." என்றார்.
பின்பு தலைவர் "Corruption is a big disease that damaged the whole country and the society" என்றார்.அதன் பின்பு நீதியரசர் ஜோதிமணி அவர்கள் "I have also received a letter stating that I have got 25 Crore from Ramachandra for Porur lake issue,I have practised and worked as a lawyer for 23 years and working as a judge for past 7 years,but not even I have own house "என்றார்.உடனே தலைவர் "After the sand issue,I thought of withdrawing the petition.But later I realized it would lead to the assumptions are correct.I have been in the politics for 51 years and never received any statement."
பின்னர் இந்த வழக்கு விசாரணை வரும் Nov 27 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தீர்ப்பின் முக்கிய அம்சம் :
1.எந்தக் காரணத்தை முன்னிட்டும் பகுதி 1,பகுதி 2 மட்டுமே தூர்வாரப்பட வேண்டும்.
2.மாவட்ட ஆட்சியர் சென்ற முறையே நீதிமன்றத்தில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக கூறினார்.அடுத்த முறை நிச்சயமாக தாக்கல் செய்ய வேண்டும்.
3. மணல் கடத்தல் என்று புகார் வந்தால் , ஆய்வாளர் அளவில் இல்லாமல் மாவட்ட கண்காணிப்பாளர் தான் விசாரிக்க வேண்டும்.
4.இந்த வழக்கில் தூர்வாருவது குறித்து Nov 5 அன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
5.அகற்றப்படும் செடிகளை வேறு எந்த நீர் நிலைகளிலும் கொட்டக் கூடாது.
பின்பு பத்திரிக்கைக்கு இது குறித்து பேட்டியளித்து விட்டு வெளியே வந்த ஒரு தலைவர் "நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்கின்றீர்கள்.அங்கு அரசியல் பேசும் வாய்ப்பு உள்ளதா ?" என்றதற்கு தலைவர் "இது கவிக்கோ அவர்களின் விழா..அங்கு அரசியல் பேச வாய்ப்பே இல்லை " என்றார்.
பின்பு News 7 தொலைக்காட்சி ஓராண்டை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் "12 மாதங்களைக் கடந்து தமிழர் நலன்,ஈழ விடியல் ஆகியவற்றை தெரிவிக்கும் News 7 மேலும் நன்கு வளர வாழ்த்துக்கள்" என்று கூறி விட்டு விடை பெற்றுச் சென்றார்.
செய்தி சேகரிப்பு: தீபன் பழனிசாமி முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment