மத்திய சென்னை மாவட்ட அண்ணா நகர் பகுதி கழக செயலாளரும், தொண்டருமான திரு.அழகேசன் அவர்கள் அலுவலகம் 8 ஆவது பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று மாலை திறந்து வைத்தார்.
8 வது பிரதான சாலையை அடைந்த தலைவருக்கு, மருத்துவர் கலாநிதி இல்லம் அருகே,நடுவாங்கரையில் பட்டாசு வெடி வெடிக்க செய்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவர் அலுவலக நுழைவாயிலை அடைய மகளிர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
.
அதன் பின்பு அங்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்றினார் தலைவர். பின்பு அனைவரும் தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் கழகக் குறிப்பேட்டில் தனது வருகையைப் பதிவு செய்து கையெழுத்திட்டார் தலைவர் வைகோ. அப்போது, அம்மா முருகன் எங்கே, வரும்போது பார்த்தேன், இங்கே காணவில்லையே,கூப்பிடுங்கள் என்று அழைத்து புகைப்படம் எடுத்தார். அப்போது பேசிய தலைவர், நான் ஒரு வினாடியில் அனைத்தையும் கவனிப்பேன் என்றார்.
பின்னர், மூத்த தொண்டர்கள் அளித்த பொன்னாடைகளை திரும்ப அவர்களுக்கே அணிவித்து மகிழ்ந்தார் தமிழின முதல்வர் வைகோ.
இந்த நிகழ்வில், இணையதள தோழர் பெங்களூரை சேர்ந்த தாமு.தாமோதரன் அவர்களை தலைவரிடம் அறிமுகப்படுத்தி அவரது பணிகளை எடுத்து சொல்லப்பட்டதும், தலைவர் மகிழ்ந்தார்.
அதன் பின்பு, மதுரை படித்துறையில் நேதாஜி பற்றிப் பேசிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை, மதிமுக இணையதள நேரலை அண்ணன் Ammapet Karunakaran காண்பித்தார். இதை எடுத்தவர் நமது கழகத்தின் புகைப்படக்காரர் Samcicil Emmanuel என்றார். முகநூல் செய்தியில் அவரது புகைப்படத்தையும் காண்பித்தார். பின்பு பெரும்பாழி மாநாட்டில் சாம் அவர்கள் எடுத்த புகைப்படத்தையும் தலைவரிடம் அண்ணன் ரெட்சன் அம்பிகாபதி அவர்கள் காண்பித்தார்கள்.
தலைவர் வைகோ புறப்படுவதற்கு முன் திருவள்ளூர் மாவட்ட,தென்சென்னை மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்து பெறச் சொன்னார். பின்ன்னர் தலைவர் விடை பெற்றார்.
No comments:
Post a Comment