கோவை KMCH மருத்துவமனையில் தவறுதலாக சிகிச்சை அளித்ததை பேட்டி எடுக்கச் சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளரை KMCH நிர்வாகம் தாக்கியுள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் ஊடகவியலாளரை தாக்கியதைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டமானது இன்று 29/10/2015 இரவு8.30 க்கு நடந்துகொண்டிருக்கிறது.
ஜனனாயக திருநாட்டில் விழிகளாக இருப்பது ஊடகத்துறை. அந்த ஊடகதுறையை தாக்குவது ஜனனாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றதாகும். எனவே ஊடகவியலாளரை தாக்கியதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் KMCH மருத்துவமனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment