"மக்கள் நலக் கூட்டியக்கம் 2016 தேர்தல் களத்தில் ? " என்று நக்கீரன் இதழின் இணையதள சர்வேவுக்கு, 32 சதவிகிதம் மக்கள் நலக் கூட்டியக்கம் வலிமையடையும் என்று பொதுமக்கள ஆன்லைனில் பதிலளித்துள்ளனர். இந்த 32 சதவிகிதம் சமூகத்தை உற்று நோக்கி அதன் அவலங்களை அனுபவித்து மாற்றத்தை ஏங்கும் நல்ல உள்ளங்களே!
ஏற்கனவே 32 சதவிகிதத்துடன், அதிமுக அல்லது திமுகவில் சேரும் என்றவர்களின் சதவிகிதம் 23. இவர்களுக் கடைசியில் மக்கள் நலனை காக்கின்ற நமது கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். அப்போது மக்கள் நல கூட்டியக்கம்தான் 55 சதவிகிதமாக வலிமையடைந்திருக்கும் பட்சத்தில் அதிகாரத்தை பிடிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை.
மக்கள் நலக் கூட்டியக்கம் தொடர்ச்சியான மக்கள் நலப் போராட்டங்களை வருகிற நாட்களில் இன்னும் வீரியமாக மேற்க்கொள்ளும். தமிழக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பும் விதமாக அமையும். மக்கள் நல கூட்டியக்கமானது ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைக்காது என்பது மக்களுக்கு தெளிவாகிவிட்டது. மக்கள் நல கூட்டியக்கத்தில் உள்ள நான்கு கட்சிகள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே மாற்றத்தை முன்னெடுக்கும் தகுதி படைத்தவர்கள் இவர்கள்.
டெல்லியில் துடைப்பத்திற்கு கிடைத்த அதிகாரம் தமிழகத்தில் மக்கள் நல கூட்டியக்கத்திற்கு கிடைக்கும்.
இனி இழப்பதற்கு உயிரை தவிர எதுவும் இல்லை!!! பெறப் போவதோ கருணை தேவனின் கடைக்கண் பார்வையில் கிடைத்துக்கொண்டே இருக்கும் வெற்றிகள் தான்!!! எனவே தொடர் போராட்டம். பெரும் வெற்றி...
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment