நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகர கழகத்தை சேர்ந்த மூத்த முன்னோடி பெரியவர் செல்வநாயகம் அவர்கள் திமுக-விலிருந்து விலகி மறுமலர்ச்சி திமுக வில் தம்மை இணைத்துக்கொண்டார். அவருக்கு, நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் AS மோகன் அவர்கள், சால்வை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெற்றார்.
மதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பெரியவர் செல்வநாயகம் அவர்கள், தலைவர் வைகோ அவர்களின் தொடர்ச்சியான மக்கள் நல போராட்டங்களும், குறிப்பாக தஞ்சை மண்டலத்தில் நடைபெற்ற மீத்தேன் போராட்டங்கள் தன்னை மிகவும் ஈர்த்ததாகவும் அதனால்தான் கட்சியில் சேர்ந்தேன் எனவும் தெரிவித்தார்.
அப்போது, மயிலாடுதுறை நகர செயலாளர் அண்ணன் மார்கெட் கணேசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment