இரண்டு நாள் கரூர் மாவட்ட மறுமலர்ச்சிப் பயணத்தின் இறுதி நாளான இன்று நொச்சிப்பட்டி தண்டபாணியின் நினைவிடத்தில் கழகம் உதிக்க காரணமான ஐவருக்கும் மழையில் நனைவதை பொருட்படுத்தாமல், மரியாதை செலுத்தி விட்டு, தலைவர் சூளுரையை மேற்கொண்டு மறுமலர்ச்சிப் பயணத்தைத் தொடங்கினார்.
இரவு வெங்கமேட்டில் தலைவர் பேசினார் வெங்கமேட்டு நினைவலைகளில் மூழ்கிய தலைவர்:- "எனக்கு இந்த வெங்கமேடு நினைவுக்கு வருகின்றது.1984 இல் திருச்சி மாவட்ட மாநாடு.அப்பொழுது தொண்டர் படைக்கு 2000 பேரை இந்த மாவட்டத்தில் நேர்காணலுக்கு அழைத்து 300 பேரை தேர்வு செய்தேன்.அந்த மாநாட்டில் மொஞ்சனூரார் தொண்டர் படைத் தலைவர்.நாங்கள் இரவு 2 மணிக்கு மாநாட்டுத் திடலுக்கு தொண்டர் படைப் பயிற்சிக்கு வந்தோம்.அப்பொழுதே ஒரே ஒரு உருவம் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது.அவர் தான் அண்ணன் ,எஸ்.வி.சாமியப்பன்.என்னைப் பார்த்தவுடன் "எல்லாம் சாப்டீங்களா? " என்று அன்போடு கேட்டார்.
தொண்டர் படைப் பயிற்சியில் எங்களைக் கைது செய்ய காவல்துறை வந்தது. நாங்கள் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற பொழுது இன்றைக்கு தொலைக்காட்சி விவாதங்களிலே வருகின்றாரே ,தமிழீழ விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகு தான் தோழர்களை அழைத்துக் கொண்டு எனக்கு பூமாலை அணிவித்தார்.நான் 25 முறை ஜெயில்ல இருந்திருக்கேன்.அங்கு பூக்கள் கிடைப்பது கஷ்டம்.இருந்தாலும் சிறிது சிறிதாக கோர்த்து மாலை அணிவித்த அந்த நிகழ்வு நினைவுக்கு வருகின்றது.
பின்னர் நாங்கள் மத்திய சிறையிலிருந்து கண்டோன்மெண்ட் சிறைக்கு மாற்றப்பட்டோம்.அங்கேயும் பேரேட்.இந்தியக் கடற்படையில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற,முன்னாள் சேர்மன் சிங்கம்புலி பாண்டியனை வைத்துப் பயிற்சி.அவரும் கைதாகி வந்திருந்தார்.அப்பொழுது அன்பிலார் உடல் நிலை சரியில்லாத்தால் எங்களை சிறையில் சந்திக்க வந்தவர் தான் அண்ணன் மலர்மன்னன்.
பரணிமணி அவர்கள் திமுகவிற்கு சென்று விட்டார். இப்ப அவர் நண்பர் பரணிமணி ஆச்சே. ஏன் இந்த ரூட் எடுத்தீங்க? கே.சி.பி சொன்னாரா? எம்.எல்.ஏ சீட் வாங்கித் தர்றன்னு. 22 வருடங்கள் சொந்த சகோதரனைப் போலவே கருதினேன். உங்களையே அழிச்சிட்டீங்களே!! எங்க இருந்தாலும் நல்லா இருங்க. இன்னமும் தொண்டர்கள் எங்ககிட்ட தான் இருக்காங்க. உங்க வீட்டுல ஐந்து தடவ சாப்டிருக்கேன். நல்லா இருங்க."
No comments:
Post a Comment