இன்று 29-10-2015 சென்னை எழும்பூர் சிராஜ் மஹால், இம்பீரியல் அரங்கத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில கொள்கை விளக்க அணியின் துணை செயலாளர், பெருமதிப்பிற்குரிய கனல் காசிநாதன் அவர்களின் இல்லத் திருமணம், த்மிழின முதல்வர், தலைவர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது.
"நடையில் நின்றுயர் நாயகன்" என்று தலைவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு வங்க கடல் அலைகள் தாலாட்டுகின்ற சென்னை கடற்கரையில் வாலிபக் கவிஞர் வாலி பேசினார். தலைவர் நடையில் மட்டுமல்ல, "பேச்சிலும் நின்றுயர் நாயகர்". ஒலிப்பெருக்கியின் உயரத்தை விட உயரம், தனக்கேயுரிய பேச்சில் உடலசைவு என்று தமிழக அரசியலில் பேச்சுக்கலையில் ஒரு பாணியை உருவாக்கியவர். அப்படிப்பட்ட தலைவரின் இன்று மணமக்கள் சந்தோஷ் அமலா திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மணமக்கள் பல்லாண்டு குழந்தை செல்வங்களோடு வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment