Monday, October 5, 2015

மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க ஆலோசனை கூட்டம், பொதுக்கூட்டமும் திருவாரூரில்!

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் 05-10-2015 அன்று காலை 11 மணி அளவில் திருவாரூர் காசி இன் ஓட்டலின் மருதம் அரங்கில் நடைபெற்றது...மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டனர்..அதில் திரு .வைகோ அவர்கள் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..மற்றும் கூட்டியக்கத்தின் செயல்பாட்டு திட்ட வடிவமைப்பு குழு கட்சிக்கு 2 பேராக நியமிக்கபட்டு அதன் இறுதிவடிவம் நவ்.2ல் வெளியிடுவது எனவும், விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நவ்.28 அன்று நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாலை 6.30 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில், கூட்டு இயக்கத்தின் சார்பாக தமிழக வாழ்வாதரங்களை காக்கவும், மீத்தேன், சேல் போன்ற திட்டங்களை கைவிட கோரியும் , காவிரியில் தடுப்பணை கட்டுவதை தடுக்க கோரி மத்திய மானில அரசுகளை வலியுறுத்தும் விதமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

துவக்கத்தில் தலைவர் வைகோ கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை மக்கள் மத்தியில் திரு.திருமாவளவன் பலத்த கைத்தட்டலுக்கு டையே அறிவித்து பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.


பின்பு பேசிய திருமாவளவன், இந்த இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் மன மகிழ்ச்சியுடன் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் லாபத்தை தாண்டி மக்கள் நலன் களுக்காக ஒன்றிணைவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சாதீய சிந்தனைகள் இன்றுவரை வளர்ந்து வருவதாகவும் பெரியார் அதற்க்காக பாடுபட்டதையும் அந்த வழியில் தலைவர் வைகோ உழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

திரு.முத்தரசன் அவர்கள் உரையாற்றும் போது யார் யாரோ முதல்வர் பதவிக்கு எல்லாம் ஆசைப்படுவதாகவும் அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளதவர்களாக இருப்பதாகவும் ..தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்துவிட்ட்தாகவும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்னிலை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திரு.ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது ஊழலை ஒழிக்க இந்த மக்கள் நல இயக்கம் பாடுபடுவதாகவும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என திரு.வைகோ பேசுவது கூடு இயக்கத்தின் விருப்பம் எனவும் குறிப்பிட்டு உழைக்கும் ஏழை வர்க்கத்திற்கு மார்க்சிஸ்டுகள் ஆற்றிய அளப்பரிய சாதனைகளை தலைவர்கள் பெயர்களை நினைவுப்படுத்தி கூறினார்.

நிறைவுரையை கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. வைகோ அவர்கள் ஆற்றும் போது இந்த இயக்கத் தலைவர்களுக்கு எதுவும் தன்முனைப்பு இல்லை என்றும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் ஊடகங்கள் மாற்று சக்தியாக உருவாகும் இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் பொய் பிரச்சாரங்களை செய்யக் கூடாது என வேண்டுகோள் விடுத்தும் மீத்தேன், சேல் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் எனவும் அதற்காக பாடுபட்ட திரு.நம்மாழ்வாரை வணங்குவதாகவும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க ரகசிய ஒப்பந்தங்கள் நடைபெறுவதாகவும் அதை மத்திய அரசு தடுக்க வேண்டும் எனவும் இந்த மக்கள் நல கூட்டு இயக்கம் வருங்கால அரசியலில் அனைவரும் எதிர்பாராத வண்ணம் மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் அந்த வெற்றியின் முதல் கூட்டம் இதே திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் எனவும் பேசினார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.பாலசந்திரன் நன்றியுரை கூற அடாது பெய்த மழைக்கிடையேயும் கூட்டம் சிறப்புற நடைப்பெற்றது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment