மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசுகள், நேதாஜி மரணம் குறித்து மூடி மறைத்தன. சைபீரிய சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அவரது மரணம் குறித்த ரகசியங்களை வெளியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்று கூறினார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட்ட பிறகு, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தது குறித்து சந்தேகம் இருப்பதாக, அவரது மகன் தெரிவித்துள்ளார். எனவே, அவரது மரணம் குறித்த ரகசியங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment