மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பாக விருதுநகர் மாவட்ட நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் விருதுநகரில் உள்ள இடதுசாரி அலுவலகத்தில் 20-10-2015 அன்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மறுமலர்ச்சி திமு கழக உயர் நிலைக் குழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான உயர்திரு.ஆர்.எம்.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். இடது, வலது கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
வருகிற நவம்பர் 3ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் மாபெரும் ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment