மதிமுக இணையதள அணி நண்பர் பாண்டியன் அவர்களின் திருமணம் விழுப்புரம் ஜெயம் மஹாலில் இன்று 25-10-2015 ஞாயிற்றுகிழமை காலை நடந்தேறியது.
இந்த திருமணத்தை மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
திருமண நிகழ்வை இணையதள தோழர் ராஜ்மோகன் தொகுத்து வழங்குகினார். இணையதள தோழர்கள் சார்பாக குமரி மாவட்ட பொறியாளர் அணி குமரி மாவட்ட செயலாளர், Er.சுரேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மணமக்களை வாழ்த்த நெய்வேலி நெருப்பு அண்ணன் திரு.செந்திலதிபன், கருத்து பெட்டகம் அண்ணன் திரு.வந்தியத்தேவன் வருகை தந்து வாழ்த்தினார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி தலைவருமான அண்ணன் க.ஜெய்சங்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
செந்திலதிபன் அவர்கள் பேசும்போது, பாண்டியனை போன்ற எண்ணற்ற இளைஞர்கள் தலைவர் வைகோ அவர்களை நோக்கி வருகிறார்கள். இந்த இயக்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது. மதிமுக அலங்கார பொம்மைகளை நம்பி அல்ல, வேரான தொண்டர்களை நம்பி என அண்ணன் செந்திலதிபன் அவர்கள் உரையாற்றினார். உப்புக்கல்லுக்கு மத்தியில் வைரக்கல்லாய் ஜொலிக்கும் மாவட்ட செயலாளர் அண்ணன் ஏ.கே.மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மணமக்கள் இல்லறத்தில் இணையும் வேளையில் நம் கழகத்தில் இணையும் தோழர்களை தலைவர் வரவேற்று வாழ்த்தினார்.
பின்னர் பேசிய தலைவர் வைகோ அவர்கள், மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி வாழ்த்துரையை தொடங்கினார். அடுத்த ஒரு வாரத்தில் அடுக்கடுக்காக இருக்கும் தனது பொதுப்பணிகளை விவரித்தார் ஓய்வறியாத் தலைவர் வைகோ.
தொடர்ந்து தாக்கி பொய்க்கதைகளை அவிழ்த்து விடும் தினமலரை சாடினார். போட்டி பொதுக்குழுவை நடத்திய செஞ்சியாரை எதிர்த்து டெல்லி காவல்நிலையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. அவர் அம்பு. எய்தவர் கருணாநிதி என்றார் தலைவர் வைகோ.
என் கட்சி தொண்டர்களின் இல்லத்தரசிகளை மதிக்கிறேன்.அவர்களால் இந்த கட்சி வாழ்கிறது. மக்கள் நல கூட்டு இயக்கத்தை பத்திரிக்கைகள் குறைத்து மதிப்பிட்டு இந்த கூட்டு இயக்கம் வெற்று பெற்று விடக்கூடாது என நினைக்கின்றன.
மூத்திரசட்டியை சுமந்து வலியை தாங்கி இயக்கம் நடத்திய ஈரோட்டுக் கிழவரின் உறுதியை கொண்டவன் இந்த வைகோ. 65 சதவிகித மக்களின் எண்ணம்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற போகிறது எனவும் பேசினார் தலைவர் வைகோ.
ஒவ்வொரு தொண்டனின் அசைவையும் நான் கவனித்து கொண்டே இருப்பேன். வயதில் மூத்த சாக்ரடீஸ் உமர்முக்தார் இளைஞர்களை ஈர்த்தார். அதே போல் இந்த வைகோவும் இளைஞர்களை ஈர்த்து வெற்றி பெறுவான் என்றார். கரவொலி விண்ணை முட்டியது.
மேலும் பேசிய தலைவர், பாவமன்னிப்பு கேட்க தேவாலயமா அரசியல்.தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். குறைந்த பட்ச செயல் திட்டம் இதுவரை எந்த கூட்டணியாவது முன் நிறுத்திய வரலாறு உண்டா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்டுங்கள் எனவும் மணமக்களுக்கு தலைவர் அறிவுரை வழங்கினார்.
இணையத்தில் கழகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் சகோதரன் பாண்டியனுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment