சிங்கை தமிழர் பேரவையின் மாதாந்திர சந்திப்பு மதிப்புக்குறிய அரங்க நெடுமாறன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பேரவையின் செயலாளர் திரு மருதீஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். பெரியாரும் மலாயா வருகையும் என்ற புத்தகத்தை துணை செயளாளர் உறந்தை இரவி அவர்கள் அரங்க நெடுமாறன் அவர்களுக்கு வழங்கினர்.
பேரவையின் துணை செயளாளர் திரு பெருமாள்சாமி அவர்கள் அரங்க நெடுமாறன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். பிறகு பேரவையின் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.
நமது கட்சி கடந்து வந்த பாதை மற்றும் நமது இலட்சியம் பற்றிய உரையை பேரவையின் அவைத்தலைவர் திரு சுரேஷ் விளக்கினார்.
அரங்க நெடுமாறன் அவர்கள் உரையாற்றும்போது, நமது தலைவர் ஆற்றிய பணி, தியாகம், உழைப்பு,நேர்மை, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் கூட்டு இயக்கத்தின் நோக்கம், அதற்க்காக பாதை மக்களிடம் இருக்கும் அறியாமை, இளைஞர்களை சிந்திக்கவிடாமல் தூண்டம், மது மற்றம் திரைப்படம், கட்சியை விரிவுபடுத்த செய்ய வேண்டியவை மற்றும் ஈழ விடுதலையின் மதிமுக பங்கு என்பன வற்றை விளக்கமாக கூறினார்
பிறகு பேரவையின் மூத்த உறுப்பினர் மரியாதைக்குரிய திரு பழனிச்சாமி அவர்கள், பேரவையின் செயல்பாடுகள் மற்றும் கடந்த கால பேரவையின் நிகழ்வுகளை கூறி நன்றியுரையை வழங்கினார்.
தொடர்ந்து, உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களையும் ஐயங்களையும், கேள்விகளையும் ஒருவர் பின் ஒருவராக தெரிவித்தனர். அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் அரங்க நெடுமாறன் அவர்கள் விடைகொடுத்தார்.
பேரவையின் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவை பின்வருமாறு,
1. மக்கள் நலன் கூட்டு இயத்தை வலுப்படுத்த வேண்டும்.
2. தமிழகம் முழுவதும் மதிமுக கிளை கழகங்களை வலுப்படுத்த வேண்டும்.
3. மதிமுக விற்கு ஊடகம் அவசியம் வேண்டும்.
புதிய தோழர்கள் வந்து சிறப்பித்து கொடுத்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. அவர்களுக்கு பேரவை சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
செய்தி சேகரிப்பு: ஜாலின்.ச, ஒருங்கினைப்பாளர், சிங்கை தமிழர் பேரவை
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment