பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டு இயக்கமான இந்தியக்கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சேர்ந்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஏனாதி ஏ.எல்.ராசு தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய ஒரிங்கினைப்பாளர் பொன்.தமிழரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கவிராஜன், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மருத்துவரணி மாநில துணைச்செயலாளர் மருத்துவர் மு.சின்னப்பா கோரிக்கைகளை விளைக்கி சிறப்புரை ஆற்றினார். இதில் பொன்னமராவதியில் கோட்டாட்சித்தலைவர் அலுவலகம் தொடங்கப்பட வேண்டும்,
பொன்னமராவதி நகரத்தில் அண்ணாசிலையில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது, இக்கால்வாயில் கான்கிரீட் சுவர்கள் தரமானதாக போடவேண்டும், இப்பணியை துரிதமாக முடிக்க வேண்டும், பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் இருக்கும் அமரகாண்டான் ஊரணியை சுற்றி நான்கு புறமும் சுற்றுச்சுவர் கட்டவேண்டும் உடன் தூர் வார வேண்டும், பொன்னமராவதியில் உள்ள பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக மாற்றி கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலையுருத்தி பேசினார்கள். இதில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நெ.இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சுடர்வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசி கோச முழக்கமிட்டனர். இதில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் செந்தில், முத்து, இளவரசன், சதாசிவம், சத்தியமூர்த்தி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நல்லதம்பி, ராஜா, பக்ருதீன், ராமசாமி, குமார், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அழகு, வெள்ளைக்கண்ணு, செல்வம், வெள்ளைச்சாமி, பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், மணிமுத்து, சேதுராமன், சிவபிரகாசம், பெருமாவளவன் உள்ளதட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment