தலைமைக் கழகம் தாயத்தில் 08.10.2015 இரவு 7 மணி அளவில் தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வருகை தந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். அப்போது பேசிய தலைவர், எனக்கு யாராவது இடையூறு ஏற்படுத்தினால் அது நன்மையாக முடியும். கலைஞருக்கு நன்றி.
இந்த இயக்கத்துக்கு வந்தால் பதவிகள் கிடைக்காது. ஆனால் உங்கள் அனைவரையும் என் உடன் பிறந்த தம்பிகள் போல பாசம் வைத்து இதயத்தில் பூட்டி வைத்திருப்பேன். என் இதயம் என்றுமே ஒரு வழி பாதை இதில் நுழைந்தவர்கள் யாரையும் நான் வெளியில் விட்டதில்லை. என் பாசம் உண்மையானது. சில பேர் சென்றிருக்கலாம். அண்ணா கூறியதைப் போல அவர்கள் என் இதயத்தை குத்தி கிழித்து ரத்தம் சொட்ட சொட்ட வெளியில் சென்றிருப்பார்கள். நான் என் இதயத்தில் நுழைந்தவர்களை யாரையும் வெளியில் தள்ளியதில்லை என பேசினார்.
மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி பேசும்போது, நாட்டுக்காக உழைக்கும் தலைவர் பின்னால் நீங்கள் வந்திருக்கிறீர்கள், வரவேற்கிறோம் என்றார்.
தென் சென்னை மாவட்ட செயலாலர், வேளச்சேரி மணிமாறன் பேசும்போது, சுயநலமில்லாத தலைவர் வைகோ. தொண்டரால் உருவாக்கப்பட்டது மதிமுக. ஜனநாயகம் வாழ வேண்டும் என்றால் வைகோ வாழ்வதும் அவசியம் என பேசினார்.
பின்னர் கழகத்தில் இணைந்த நண்பர்கள் தலைவர் வைகோ மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment