காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைகோவின் இரண்டாம் நாள் மறுமலர்ச்சிப் பயணத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறுமலர்ச்சி வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி, தாம்பரம் நகரத்தில் தனது முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தார்.
இரண்டாம் நாள் பயணமாக இன்று 04.10.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் தனது பயணத்தைத் தொடங்கி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், கடப்பாக்கம், சூனாம்பேடு, சித்தாமூர், மதுராந்தகம், மாமண்டூர் வழியாகச் சென்று இரவு 9 மணி அளவில் செங்கல்பட்டில் தனது பயணத்தை நிறைவு செய்தார்.
அலங்கார வளைவுகள், வண்ணப் பதாகைகள், வழியெங்கும் கொடிகள் என மறுமலர்ச்சிப் பயண ஏற்பாடுகளில் மின்னியதுது திருப்போரூர்.
தலைவர் வைகோ மறுமலர்ச்சி பயணம் வருவதற்கு முன்பாக திருப்போரூரில் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது. தலைவரை கண்டு அரசுக்கு பயம் இருக்கிறது.
அலைகடலெனத்
தன்னெழுச்சியாய்
திரண்ட கூட்டத்தினரிடையே எழுச்சி உரையாற்றினார் தலைவர் வைகோ அவர்கள். அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள்,
மக்கள் நலக் கூட்டியக்கம் எஃகின் உறுதியோடு உள்ளது. பத்திரிகைகளில் யூகத்தின் அடிப்படையில் வரும் செய்திகளுக்கு விடிந்தால் விடை கிடைக்கும்.
திமுக அதிமுக தலைமைகள் ஊழல் மயத்தில் திளைக்கின்றன.
மின்வெட்டு, மக்கள் உயிர்கள், விலைவாசி உயர்வு எதைப்பற்றியும் கவலைப்படாத கட்சிகள் இரண்டும்.
மாற்று அணிக்கு வாக்களிப்பது வீண் என்ற மாயையை மக்கள் மனதில் ஊடகங்கள் விதைக்கின்றன.
இளைஞர்களால் மாற்றத்தை உருவாக்க முடியும். அவர்கள் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
டெல்லியில் வந்த மாற்றம் தமிழகத்திலும் வரும். இளைஞர்கள் உங்கள் நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்களிடம்மாற்றம் வேண்டியதன் அவசியத்தை சொல்லுங்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமே, கல்யாணம், துக்கம் எதற்குப் போனாலும் கூட்டணி என்று கூறிவிடுவார்கள். அதிமுகவினர் மாற்று கட்சியினரைப் பார்த்து சிரித்துவிட்டால் பதவி பறி போய்விடும்.
திமுகவினர் கண்ணில் பட்ட எந்த நிலமும் உரிமையாளருக்கு நிலைத்ததில்லை. ஜெயலலிதா பின்னால் மன்னார்குடி மாஃபியா இருக்கிறது. திமுகவில் பல மாஃபியா கும்பல்கள் இருக்கின்றன.
திருப்போரூர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவாக மாறும். மக்கள் நலக் கூட்டியக்கத்தின் நான்கு கட்சிகள் கறை படியாதவை.
No comments:
Post a Comment