சென்னை மைலாப்பூர் கவிகோ அரங்கத்தில் திரு. அய்யநாதன் அவர்கள் எழுதியுள்ள "ஈழம் அமையும்" என்ற நூல் வெளியிடும் விழா நடந்தது.
தலைவை வைகோ சரியாக வந்துவிட்டார், பின்னர் வந்த பழ நெடுமாறன் அவர்களை வைகோ எழுந்து நின்று வரவேற்றார்.
திரு.ஆவல் கணேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நூல் வெளியிடப்பட்டது. இந்த "ஈழம் அமையும்" என்ற நூலை திரு.பழ நெடுமாறன் அவர்கள் வெளியிட மதிமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூல் மதிப்புரை வழக்கறிஞர் பானுமதி அவர்கள் பேசும்போது, மக்களின் உண்மையான பிரதிநிதிகள் ஐயா நெடுமாறன் ஐயா வைகோ ஆகியோர்தான். மக்களை ஒருங்கிணைத்து ஈழம் பெற முயற்சிக்க வேண்டும் என பேசினார்.
ஊடகவியலாளர், உணர்வாளர் டி.எஸ்.எஸ்.மணி அவர்கள் பேசினார். பேராசிரியர் ராமு.மணிவண்ணன் அவர்கள் பேசும்போது, ஒரு பொருளாதாரப் போரை தமிழகத்தில் முன்னெடுப்போம் என்றார்.
எந்த கூட்டணியில் இருந்தாலும் தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தமிழீழ விசயத்தில் என்றும் இலக்கை நோக்கியே பயணிப்பார்,அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் தவற விட மாட்டார் என்ற முழு நம்பிக்கையே அவரை வித்தியாசப் படுத்தி காட்டுகிறது. அதுதான் தலைவர் வைகோ. வெற்றி பெற்ற அநீதியை விட தற்காலிகமாக தோல்வி அடைந்த நியாயமே மேலானது என முடித்தார் திரு.ஜென்ராம்.
அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார். ஐயா பழ.நெடுமாறன் உரை நிகழ்த்தும்போது, மாணவர்களுக்கான நூல் இது எனவும் இந்தியாவின் இரட்டை நிலையையும் இதில் விளக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தலைவர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது, ஈழ விசயத்தில் இந்தியா கூட்டுக் குற்றவாளி என்பதை விளக்கினார். 2009 மே 13ல் துவாரகா போரிட்டு கொண்டிருந்த போது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாததால் இறந்து போனார்கள். இதை இங்கு பதிய வைக்க வேண்டும் என சொல்கிறேன் என தலைவர் வைகோ பேசினார்.
பிரபாகரன் அவர்கள் எரிமலையாக இருந்தாலும் மனிதநேயத்தில் பனிமலை போன்றவர். சுனாமி பேரழிவிலிருந்து சிங்களர் தமிழர் என பிரித்து பார்க்காமல் உதவிகள் செய்தனர். இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் பேசியதையும் தலைவர் வைகோ நினைவு கூர்ந்தார்.
நல்ல நூலை எழுதிய அய்யநாதன் அவர்களுக்கு தலைவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பழ நெடுமாறன் தலைவை வைகோ ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.






























No comments:
Post a Comment