Sunday, April 3, 2016

கரூரில் மாற்றுக் கட்சி தோழர்கள் மதிமுக வில் இணையும் நிகழ்வு!

கரூர் மாவட்ட மதிமுக சார்பில் மாற்றுக் கட்சி தோழர்கள் மதிமுக வில் இணையும் நிகழ்வு இன்று நடந்தது. 

இதில் ஆயிரக்கனக்கான பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தோழர்களும் எந்தக் கட்சியும் சாராத புதிய இளைஞர்களும், மகளிரும் பெரும் திரளான அளவில் தங்களை மதிமுக மாவட்ட மற்றும் மாநில மதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை மதிமுகவில் இணைத்துக் கொண்டனர்

பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை மதிமுக வில் இணைக்கும் விழாவில் அரங்கமே கொள்ளாத அளவிற்கு பெண்களும், மாற்று கட்சியை சார்ந்தவர்களும், இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இந்த கரூர் நிகழ்வால், அந்த மாவட்டத்தில் அதிமுக திமுக வை சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளதாக அறியப்படுகிறது. எதிரிகளின் கூடாரத்திற்கே சென்று வெற்றி ஈட்டிய சிதறடித்த வெற்றிக் களிப்பில் கரூர் மாவட்ட மதிமுக இருக்கிறது.

இதை சாத்தியப்படுத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணன் பழனிவேல், மாணவர் அணி அமைப்பாளர் காமராஜ், ஒருங்கிணைத்து நிகழ்வை வெற்றிகரமாக்கிய கபினி பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கடலூர் திறந்த வெளி ஆலோசனை கூட்டத்திற்கு கடலெனெ திரண்ட தொண்டர்கள்!

கடலூரில் நடைபெற்ற மக்கள் நல கூட்டணி - தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் திறந்த வெளி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்று சொல்லும் அளவிற்கு திகைக்க வைத்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதுரையில் பேட்டியளித்துவிட்டு செய்தியாளர்களுடனே காலை உணவருந்திய வைகோ!

மதுரையில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்களின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நடந்தது. 

அப்போது பேசிய வைகோ அவர்கள், தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி ஆட்சியில் வேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். வேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். மாணவர்களின் கல்வி கடனை அரசே ஏற்கும்.

திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றன. நாங்கள் இளைஞர்கள், மாணவர்கள், மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சுங்கச் சாவடி கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவதுடன் படிப்படியாக சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ அறிக்கை!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய 1992 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், ஆண்டு தோறும் ஏப்ரல் 1 ஆம் தேதியும், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தச் சுங்கச் சாவடிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1 இல், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட 21 சுங்கச் சாவடிகளிலும், தற்போது ஏப்ரல் 1 இல் மற்ற 20 சுங்கச் சாவடிகளிலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 41 சுங்கச் சாவடிகளில் 15 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்ந்திருக்கிறது.

ஏற்கனவே டீசல் விலை உயர்வு, டயர் விலை உயர்வு, வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாகன காப்பீட்டுத் தொகை உயர்வு போன்ற காரணங்களால் வாகனப் போக்குவரத்துத் தொழில் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சுங்கவரி அதிகரித்து, போக்குவரத்து செலவு கூடும். இறுதியாக இந்தச் சுமை மக்கள் மீது ஏற்றப்பட்டு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் பலமடங்கு உயர்ந்துவிடும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சுங்கச் சாவடிகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, குறைவான சுங்க வரியை கேரள அரசே வசூலிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு காலமாக செயல்படாத ஜெயலலிதா அரசு, மக்களைப் பாதிக்கும் சுங்கச் சாவடிகள் குறித்து கவனம் செலுத்தாமல், அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டது கண்டனத்துக்கு உரியதாகும்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் சுங்கச்சாவடி விதிகள் 2008 இல் வகுக்கப்பட்டன. தற்போது பா.ஜ.க. அரசும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களையே செயல்படுத்தி வருகிறது.

வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போதே சாலை வரி வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகள் அமைத்து தனியார் கட்டாயமாக சுங்கவரி வசூல் செய்வது மக்கள் தலையில் இரட்டை வரி விதிப்பது போல் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுவதுடன், சுங்கச் சாவடிகளையும் படிப்படியாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, April 2, 2016

மாமல்லபுரம் கட்டண உயர்வை ரத்து செய்ய வைகோ அறிக்கை!

1400 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி தலைநகரமாக கொண்டு ஆண்ட பல்லவப் பேரரசு சிற்பம் கட்டிடக்கலைக்கு மத்தவிலாசம் என்னும் நூலை வடித்தனர். வெட்டுதலி, கட்டுதலி, குடைதலி என மூன்றுவிதக் கலையைத் தோற்றுவித்தனர். இன்றைக்குத் தமிழ்நாட்டின் கட்டிடக் கலையை உலகத்திற்குப் பறைசாற்றும் விதத்தில் மாமல்லபுரம் திகழ்கின்றது. உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ (Unesco) அறிவித்து இருக்கின்றது.

இந்தக் கலைக் கருவூலத்தைக் கண்ணை இமை காப்பது போன்று உள்ளூர் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 1958 ஆம் ஆண்டு, இந்திய அரசு, புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க தொல்லியல்துறையை உருவாக்கியது. மாமல்லபுரம் உள்ளிட்ட பழமையான சிற்ப நகரங்களை பாதுகாக்கிறோம் எனக் கூறி, சுற்றுச்சுவர் எழுப்பி அதன் மேல் இரும்புக்கம்பிகளால் வேலி அமைத்தனர்.

1999 ஆம் ஆண்டு முதல், கலைச் சின்னங்களைப் பார்வையிடுவதற்கு, இந்தியர்களுக்கு ரூ 10/- என்றும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 10 அமெரிக்க டாலர் என்றும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இது, சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும் என்று, அப்போது மதிமுக சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்த மல்லை சத்யா அவர்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று, பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, நுழைவுக்கட்டணமாக இந்தியர்களுக்கு ரூ 10/- என்றும், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு 5 அமெரிக்க டாலர் என்றும் குறைத்து அறிவிக்கச் செய்தேன்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு, மாமல்லபுரத்தில் குடியிருக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற விதத்தில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மக்கள் விரோதச் சட்டத்தை கொண்டு வந்தனர். இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, 18.08.2010 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டேன்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 108 வைணவ திவ்ய தேசங்களின் 63 ஆவதாக விளங்கும் அருள்மிகு Þதலசயன பெருமாள் கோவிலைக் கையகப்படுத்துவதற்காக, 20.05.2015 அன்று மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது. இது மக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டித்து, 30.05.2015 அன்றும் 06.08.2015 அன்றும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டேன்.

மாமல்லபுரத்தில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழு’ என்ற அமைப்பை உருவாக்கி வீரியம் நிறைந்த பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுகழகம் முழுமையாகத் துணை நின்றதோடு அல்லாமல், மாமல்லபுரத்தில் எனது தலைமையில் 21.11.2012 அன்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அதன்பிறகு, மத்திய தொல்லியல்துறை Þதலசயனப் பெருமாள் கோவிலைக் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட்டது. அதுமட்டும் அல்லாமல் 2010 ஆம் ஆண்டில் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் தளர்த்தியது.

இந்நிலையில், 01.04.2016 அன்று முதல் பார்வையாளர் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ 30/- என்றும், சார்க் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ரூ 500/- என்றும், ஏனைய ஐரோப்பிய, ஆÞதிரேலியா, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த நபர் ஒன்றுக்கு ரூ 750/- என்றும் கட்டணம் நிர்ணயித்து அரசு ஆணை வெளியிட்டு வசூலிக்கத் தொடங்கி விட்டனர்.

அத்துடன், மாமல்லபுரம் சிற்பப் பகுதிகளில் திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் பகல் 10 மணி நேரத்திற்கு மட்டும் ரூ 1,00,000/- கட்டணமும், குறும்படம் எடுப்பதற்கு ரூ 50,000/- கட்டணம் நிர்ணயித்து இருக்கின்றார்கள். இது நமது கலையை உலகு அறியச் செய்யும் செயலா? அல்லது கலையை முடக்கும் செயலா?

கட்டண உயர்வு குறித்து, உள்ளூர் மக்களின் கருத்தையும், சுற்றுலா பயணிகளின் கருத்தையும் கேட்கவில்லை. தமிழக அரசும், காஞ்சி மாவட்ட நிர்வாகமும், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும் இது சம்மந்தமாக எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஏற்கனவே மாமல்லபுரத்திற்கு உள்ளே செல்ல வேண்டுமென்றால் 1. கிழக்கு கடற்கரை சாலை - சுங்கவரிக் கட்டணம். 2. மாமல்லபுரம் பேரூராட்சியின் வாகன வரிக் கட்டணம். 3. வாகனம் நிறுத்தக் கட்டணம். 4. சிற்பங்களைப் பார்வையிடக் கட்டணம் என்று சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பகல் கொள்ளை அடிப்பது போல, மத்திய அரசின் வசூல், மாநில அரசின் வசூல், பேரூராட்சியின் வசூல் என்று எல்லாத் துறைகளிலும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தொல்லியல்துறையின் பார்வையாளர் கட்டணத்தை மேலும் உயர்த்துவது முறையற்ற செயல், கண்டனத்துக்கு உரியது. இது மாமல்லபுர மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதாகும். பணம் இல்லையென்றால் மாமல்லபுரம் செல்ல முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள்.

சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கின்ற மாமல்லபுர மக்கள் இந்தக் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த அடாவடிக் கட்டண உயர்வை உடனடியாக இரத்து செய்திட வேண்டுமென மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன். தவறினால், மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமைக்குழு சார்பில் என்னுடைய தலைமையில், மல்லை சத்யா அவர்கள் முன்னிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடைபெறும். மாமல்லபுரம் நலனில் அக்கறையுடைய அனைவரும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

இந்திய தேசிய லீக் கட்சி மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு!

தாயகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா. அப்துல் ரஹீம் அவர்கள் மக்கள் நலகூட்டணி தலைவர்களை சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். 

அப்போது மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன, இரா.முத்தரசன் ஆகிய அனைத்து தலைவர்களும் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, April 1, 2016

விஜயகாந்தை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு இன்று 01-04-2016 சென்றனர். தேமுதிக அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த அவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகளை நடத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவிற்க்கு வைகோ கண்டனம்!

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மதுவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்களின் கோபாவேசம், ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகப் பேரலையாகப் பரவி வருகிறது. ஆட்சியின் அÞதமன நேரத்தில்கூட மதுவுக்கு எதிராகப் போராடுவோர் மீது ஜெயலலிதா அடக்குமுறையை ஏவுகிறார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மதுவால் சீரழிந்த தமிழகத்தின் நிலைமை குறித்தும், தமிழ்நாட்டின் பண்பாட்டு சீரழிவு, வளரும் தலைமுறையினர் பாதிக்கபடும் பேரவலம், சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மக்கள்அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் காளியப்பன் மற்றும் டேவிட்ராஜ், சென்னை ஆனந்தியம்மாள், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ, 504 மற்றும் 505 (1)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன் அவர்கள், ‘மூடு டாÞமாக்கை மூடு என்ற’ பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் அவர் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. தற்போது மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசியவர்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துதோடு, ஜெலலிதாவின் அதிகார ஆணவத் தர்பாருக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி