Saturday, June 27, 2015

தமிழ் போல தழைக்க தியாகவேங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மறுமலர்ச்சி திமுக கழக பொதுசெயலாளர் பெருமதிப்பிற்குரிய தலைவர் வைகோவின் நம்பிக்கை தளபதி, கழகத்தின் ஆட்சிமன்றக் குழு செயலாளர், கொங்கு மண்டலத்தின் கொள்கைக் காவலர், எழுச்சி மாநாடு நடத்திய எழுச்சி நாயகன், ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளர் தியாகவேங்கை கணேசமூர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். 

அண்ணன் அ.கணேசமூர்த்திEX.MP அவர்கள் தமிழீழ சோமு திருமண வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதிமுக இணயதள நண்பர்கள் கலந்துரையாடலில் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். அப்போது அவர்களின் தமிழ் பற்றை அவரின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காண முடிந்தது. தமிழில் பேசுங்கள், தமிழில் வாழ்த்துங்கள், தமிழில் எழுதுங்கள், தமிழில் பெயர் வையுங்கள் என பல்வேறு கருத்துக்களை தமிழ் பற்றியே கூறிவிட்டு, யாருக்காவது தமிழில் எண்களை எழுத தெரியுமா என்று இணையதள அணி நண்பர்களிடத்தில் கேட்டபோது அனைவருமே திருதிருவென முழித்தோம். அப்போது சொன்னார் நாமே தமிழில் எண்களை எழுத படிக்க தெரியாமலிருக்கிறோம். எனவே முதலில் தமிழ் எண்களை படிக்க எழுத ஆரம்பியுங்கள், வெற்றி காணுங்கள் என வாழ்த்தினார். அப்படிபட்ட தமிழ் பற்றாளரை மதிமுகவின் தியாக வேங்கையை தமிழ் போல தழைக்க வாழ்த்துகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ஈரோட்டில் மதிமுக இணையதள அணியின் கலந்தாய்வில் தலைவர் வைகோவின் அலைபேசி உரை தொகுப்பு!

07-06-2015 அன்று ஈரோடில் மதிமுக இணையதள அணியின் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழின முதல்வர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் தியாகவேங்கை திரு.கணேசமூர்த்தி அவர்களின் அலைபேசி மூலம் ஆற்றிய உரை இதோ உங்களுக்கு எழுத்து வடிவத்தில்..

தமிழ்தாயின் தலைமகனான அறிஞர் அண்ணா அவர்களின் பாசறை வார்ப்பான எனது ஆருயிர் சகோதர்ர் கணேசமூர்த்தி அவர்களே!

இயக்கத்தின் எதிர்கால நம்பிக்கையை எங்கள் நெஞ்சங்களில் விதைத்து கொண்டிருக்கின்ற இந்த அறிவுயுகத்தில் கணிப்பொறி யுகத்தில் மின்னல் வேகத்திலே செய்திகளை பரிமாறி தமிழினத்தை பாதுகாக்க துணை நிற்கின்ற இணையதள சகோதர்களேஉங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
திருமண விழாவில் பங்கேற்றதோடு திராவிட இயக்கத்துக்கு நேர்ந்துள்ள ஆபத்துக்களை தகர்ப்பதற்கான படையணியாக உருவாக நமது இணையதள அணி முடிவு எடுத்திருப்பதை அறிந்து நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அறிவாசான் தந்தை பெரியாரும் பேரரிஞர் அண்ணா அவர்ளும் உருவாக்கி கொடுத்த திராவிட இயக்கம் தமிழகத்திற்கு செய்திருக்கின்ற சாதனைகள் ஏராளம்... ஏராளம்... ஏராளம்... இன உணர்வு, மான உணர்வு, சுயமரியாதைபகுத்தறிவு, விழிப்புணர்வு, நாம் யார்... நம்முடைய கடந்த கால வரலாறு என்ன என்பதை பற்றிய புரிதலோடு அனைத்தையும் தந்தது திராவிட இயக்கம்... எழுத்தால்பேச்சால்கலை மாண்பால், தியாகத்தால், உழைப்பால், இந்த இயக்கம் பாதுகாக்கபட்டது. தலைவர்கள் இரத்தமும் கண்ணீரும் சிந்தி இந்த இயக்கத்தை பாதுகாத்திருக்கிறார்கள்...

தவறுகள் நடந்திருக்கின்றன, ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன, அதனால் அதாவது ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைகின்ற ஆபத்தை சந்தித்து கொண்டிருக்கிறது திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்றுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் இயக்கம் உதித்த நாள் முதல் கொள்கையில் எந்த கட்டத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் எந்த இடத்தில் எந்த துறையில் எந்த கூட்டணியில் இருந்தாலும் கொள்கைக்காக லட்சியத்துக்காக அதிகமான விலை கொடுத்த இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.

இந்த தமிழ் இனத்திற்கு வந்திருக்கக்கூடிய சோக வரலாறு ஈழத்தில் நம் காலத்தில். இன்னும் ஈழத்தமிழர்களை காப்பதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்திருக்கிற விலையை போல எந்த ஒரு இயக்கமும் தன்னை ஆட்படுத்தி கொண்டதில்லை.. அதற்காக கடுமையாக நாம் போராடி வந்திருக்கிறோம். விடுதலைபுலிகளின் தடையை உடைப்பதற்கு நாம்தான் இன்றைக்கும் களத்திலே இருக்கிறோம்..நீதிமன்றத்திலே நிற்கிறோம். முரண்பாடு இருந்தது. 24 மணி நேரத்தில் உதறி எறிந்து விட்டு நரேந்திர மோடி அரசை எதிர்த்து கருப்புக் கொடி உயர்த்தினோம். இந்த துணிச்சல் நம்மை தவிர வேறு யாருக்கும் வராது. ஆகவே ஒரு சோதனையான காலக்கட்டம்.

திராவிட இயக்கத்தை பாதுகாக்கக்கூடிய முழு தகுதியுள்ள ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்தான்நம்மை எவரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத நாணயமானவர்களாக, நேர்மையாணவர்களாக, கொள்கையாளர்களாக நாம் இருந்து வருகிறோம். இதை மக்களிடம் முன்னெடுத்து செல்வதற்கு வளரும் தலைமுறையாகிய நீங்கள்தான் செய்ய முடியும். எங்களுடைய பருவம் ஏறத்தாழ நாங்கள் எங்களுடைய இடைப்பட்ட காலத்தை கடந்து நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போய் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நீங்கள் இயக்கத்தினுடைய எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள்தான். அந்த வித்த்தில் உங்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். உங்களுக்கு எந்த விதத்தில் நன்றி தெரிவிப்பது என்று வார்த்தைகளை தேடுகிறேன். என் அருமை தம்பிகளே...உங்களுடைய முயற்சிகளுக்கு என் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இந்த இயக்கத்துக்கு எல்லாவித்திலும் எந்த சூழ்நிலையிலும் பக்கபலமாக இருக்கிறீர்களே. உங்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது தம்பிகளே... உங்கள் சொந்த வாழ்விலும் உயருங்கள். உங்கள் சொந்த வாழ்விலும் வெற்றி பெறுங்கள். இந்த சமூக அக்கறையோடு நீங்கள் எடுக்கும் முயற்சியிலும் வெற்றி காண வாழ்த்துகிறேன்வணக்கம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, June 26, 2015

தூத்துக்குடியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலை திறக்கிறார் வைகோ!

அன்னைத் தமிழை தன் கண்ணைப் போல் காத்து தமிழன் புகழை தரணிக்கு உணர்த்திய தன்மானச் சுடர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். அன்னார் அவர்களின் திரு உருவச்சிலையை 28-06-2015 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் தலைவர் வைகோ திறந்து வைக்கிறார். கழக கண்மணிகள் கலந்துகொள்ள அன்பாய் வேண்டுகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

20 தமிழர் குடும்ப பாதுகாப்பும் ஆதரவும் பொதுகூட்டத்தில் வைகோ!

ஆந்திர மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட 20 குடும்பத்தினருக்கு ஆதரவும் பாதுகாப்பும்" பொதுக்கூட்டம் இன்று (26.06.2015) போளூரில் நடைபெற்றது. அதில் தலைவர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஆந்திர ஶ்ரீவாரு சேசாலம் வனப்பகுதியில் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பதைக் கண்டித்து முதன் முதலில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போர் என்று அறிவித்தார். பின்பு காவல் துறை அறிவிப்பு காரணமாக வேலூரில் கைது செய்யப்பட்டு வேலூர் மாநாகராட்சி அலுவலகம் அருகில் உள்ள டி.பி.தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார் தொண்டர்களுடன். 

அண்ணன் வேல்முருகன் தலைவராக இருக்கும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் உடல் நிலை ஒத்துழைக்காத போதும் கலந்து கொண்டு உணர்ச்சிப் பிழம்பாக முழங்கினார். அதன் பின்பு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் பிரதமரை சந்திக்கும் குழுவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதியை அனுப்ப அழைத்த பொழுது 20 தமிழர்கள் விடயத்தையும் கோரிக்கை மனுவில் இணைக்குமாறு கூறியவர் தலைவர். 

அதன் பின்பு மனித உரிமைகளுக்கான குடிமக்கள் காப்பகம் சார்பில் நடைபெற்ற உண்மை நிலை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்ற பொழுது அதில் கலந்து கொண்டு 20 தமிழர்கள் குடும்பங்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நிதியுதவி செய்து அற்புதமான உரை வழங்கினார். தொடர்ச்சியாக குடிமக்கள் காப்பகம் சார்பில் திருவண்ணாமலை போளூர் அண்ணா சிலை அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உண்மையில் தலைவர் பிறவிப் போராளி. இவரைப் போன்ற ஒரு போராளி இனி தமிழ்நாட்டில் தோன்றவும் முடியாது. தலைவர் அரசியல் வானில் ஆச்சரியம்.

செய்தி சேகரிப்பு: தீபன் முகநூல்

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

ஓமன் மதிமுக இணையதள அணியின் திரு. ஜகுபர் அலி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுக!

மறுமலர்ச்சி வேங்கைகளே வணக்கம்!

உங்களிடத்தில் ஏற்கனவே பகிர்ந்த தகவலை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். ஓமன் மதிமுக இணையதள அணி நண்பர் திரு ஜகுபர் அலி அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரின் வாழ்வாதாரத்திற்காக உதவுமாறு அன்புடன் கேட்டிருந்தோம். தமிழீழ சோமு திருமண வீட்டில் நடைபெற்ற மதிமுக இணையதள அணி நண்பர்கள் கலந்துரையாடலிலும் உதவி சம்பந்தமாக மறுமலர்ச்சி மைக்கேல் ஆகிய நான் எடுத்துரைத்தேன். இப்போது அனைத்து நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் ஒரு ஆள் முயர்ச்சி எடுத்து உதவிதொகை முழுவதையும் சேர்த்து அந்த சன்மானத்தை தலைவர் வைகோவின் திருக்கரங்களால் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். 

எனவே அனைத்து நண்பர்களும் என்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பினால் யாரெல்லாம் தருகிறீர்களோ அவர்களின் பெயரை தாங்கி கணக்கு வைக்கப்படும். மேலும் இணையதளத்தில் உதவி கிடைக்கப்பெறும்போதெல்லாம் உடனடியாக உங்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்படும். என்னுடைய வங்கி கணக்கிற்கு நம்முடைய மறுமலர்ச்சி வேங்கைகள் பணம் அனுப்ப அண்ணன் ஜகுபர் அலி அவர்களிடம் தெரிவித்து இன்று காலைஅனுமதியும் பெற்றேன். 

என்னருமை நண்பர்களே! கழகத்தின் கண்மணிகளே! 
மறுமலர்ச்சி திமு கழகம் இன்றளவும் மக்கள் தொண்டாற்றுகின்ற கட்சி என்பதை இதுபோன்ற மனிதநேய செயல்பாடுகளால் நிரூபித்துக்கொண்டே இருக்கிறோம் மக்கள் மன்றத்தில். அனைத்து நண்பர்களும் போதிய பொருளாதார வசதி இல்லையென்றாலும் இன்முகத்தோடு உதவ முன் வருகிறீர்கள். உங்களுடைய உதவி ஒரு குடும்பத்தையே தழைக்க வைக்க போகிறது என்பதை எண்ணி உங்கள் மனதில் பூரிப்புண்டாகட்டும். இதன் மூலம் மதிமுக மகுடத்திற்கு மேல் மகுடங்களால் அலங்கரிக்கபடட்டும். எனவே அனைத்து நண்பர்களும் உங்களால் இயன்ற உதவியை பின்வரும் வங்கி கணக்கிற்கு அனுப்பிதர அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

வங்கி கணக்கு விபரம்:
____________________________________
Name: Micheal Selva Kumar K D
Account No: 30281334664
IFS Code: SBIN0000880
Branch Name: SBI Main Branch, Nagercoil
____________________________________


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

Thursday, June 25, 2015

”வைகோ” ஆண்ட்ராய்டு செயலியை வைகோ துவக்கி வைத்தார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்காக ‘Vaiko’ என்ற பிரத்யேக ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செல்போன் செயலி (application) உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று 25.06.2015 மாலையில் தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பொத்தானை அழுத்தி தொடக்கி வைத்தார்.

இதன் மூலம் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிக்கைகள், அன்றாட நிகழ்வுகள், புகைப்படங்கள், ஒளிக்காட்சிகள் உடனுக்குடன் பதிவேற்றப்படும். ‘Vaiko’ என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து அன்றாட கழக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 

பொதுச்செயலாளர் வைகோ குறித்த பொது தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் அறிந்திட கீழே கொடுக்கப்பட்ட link- click செய்து செயலியை தங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ளலாம்https://t.co/SF7k4LGcCV. இது 4.55 mb அளவுடைய சிறிய அளவிலான செயலியாகும். Smart Phone களில் PLAY STORE ல் VAIKO என டைப் அடித்து அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மாணவர்களிடம் வைகோ அவர்கள் பேசும்போது, இளமை பருவத்தில் மாணவர்களுடன் இணைந்து தான் ஆற்றிய பணிகளையும், கழக நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டதுடன், தற்போது மாணவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளதையும் பாராட்டி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, மாணவர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள் சேஷன், ப.த.ஆசைத்தம்பி, மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநிலச் செயலாளர் பா.சசிக்குமார், மத்திய சென்னை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மு.மாயன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த முயர்ச்சிக்கு காரணமான மறுமலர்ச்சி மாணவர் மன்றம் மாநில செயலாளர் பொறியாளர் வழக்குரைஞருக்கு படித்துக்கொண்டிருக்கும் அருமை தம்பி பா.சசிகுமார் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  இதற்காக அரும்பாடுபட்ட அனைத்து மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் கண்மணிகளுக்கும் ஓமன் இணையதள அணி வாழ்த்துதலையும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இணையத்தில் பல சாதனைகளை செய்து தலைவர் வைகோவையும் கழகத்தையும் உலக அளவில் எடுத்து செல்லவும், இணையத்தின் மூலம் களமாடி வருகிற சட்டசபை தேர்தலில் மதிமுக வின் பலத்தை  நிரூபிக்கவும் வாழ்த்துகிறோம். 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

"மீண்டும் எமர்ஜென்சி?" சிறப்பு கருத்தரங்கத்தில் வைகோ சிறப்புரையாற்றினார்!

அம்பேத்கார்-பெரியார் வழக்கறிஞர்கள் வாசிப்பு வட்டம் நடத்தும் "மீண்டும் எமர்ஜென்சி?" சிறப்பு கருத்தரங்கம் உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள YMCA அரங்கின் முதல் தளத்தில் இன்று வியாழன் 25-06-2015 மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

தலைவர்கள் வந்தவண்ணமிருந்தனர். தலைவர் வைகோ அவர்கள் திராவிட இயக்க முன்னோடி திரு.ஆனூர் ஜெகதீசன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். வழக்கறிஞர்களுடன் முன்னாள் எம்பி அண்ணன் கணேசமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்.

நாளை மணமகனாக இருக்கும் 27 ஆவது வட்ட செயலாளர் சுரேஷ் தலைவரிடம் ஆசி பெற வந்தார்... நாளை திருமணத்தை வைத்துக் கொண்டு இங்கு என்ன வேலை என்றார் எங்கள் மாமனிதர் வைகோ. அதுதான் கழகம். அதுதான் மதிமுக தொண்டன்.

காவல்துறையின் நெருக்கடியையும் மீறி எமர்ஜென்சி கூட்டம் ஆரம்பமானது. நீதிமன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் நெருக்கடியான கூட்டம் கூடியிருந்தது. திரு.குமார தேவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வ உ சி க்கு பிறகு சிறை களை பற்றி தெரிந்தவர் அண்ணன் வைகோ அவர்கள் என தலைவர் வைகோ அனுபவித்த பாடுகளை சுட்டிக்காட்டினார் குமாரதேவன். பின்னர் வழக்கறிஞர் துரை சாமி அவர்கள் நெருக்கடிநிலையின் நிகழ்வுகளை விளக்கினார். நெருக்கடி நிலையில்... திருமணம் ஆகாதவர்களுக்கெல்லாம் கட்டாய வாசக்டமி(பெண்களுக்கான கருத்தடை) செய்யப்பட்டது. மூன்று பேர் தூக்கு தண்டனை வழக்கில் கடைசியாக வந்து வெற்றி பெற்றவர் வைகோ என துரைசாமி கூறினார்.  

வழக்கறிஞர் தேவதாஸ் முன்னிலை வகித்து பேசினார். எமர்ஜென்சி கை தி ன் போது யாருக்கும் ஆர்டர் தரப்படவில்லை...தலைவர் வைகோ அவர்களுக்கு கூட தகவல் தெரிவிக்கபட்டதே தவிர ஆர்டர் தரப்படவில்லை...

இந்த சிறப்பு கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். அந்த சிறப்புரையில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அந்த நிசப்தமான சூழ்நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் நெருக்கடி நிலை பற்றியும் கூறினார்.நெருக்கடி நிலையின் போது நெல்லை மாவட்டத்தில் முதலில் கைதானவன் நான்... ஆனால் முரசொலியில் கைதானவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை. நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதில் தினமணி கோயங்கா முக்கியமானவர். இந்த ஆண்டு ஜன 26 அன்று வந்த மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு துறை விளம்பரத்தில் செக்குரிலிசம் சோசலிசம் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற வாதங்களை பிரதமர் கேட்கிறாரா, செல்கிறாரா. திருமூலர் சொல்லியதுதான் யோகா. இந்துத்துவாவை திணிக்கத்தான் யோகாவை பயன்படுத்துகிறார்கள். இன்றைய நிலையில் நெருக்கடி நிலையை கொண்டு வர முடியாது என்றார். பின்னர் ஊடகயியலாளர்களுக்கு பேசிய தலைவர் வைகோ ஜனநாயக தேர்தல் அல்ல ஆர் கே நகரில், இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.

இந்த நிகழ்வில் மதிமுக மாணவரணி செயலாளர் இராஜேந்திரன் மற்றும் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன், இணையதள அணியின் சகோதரர் தீபன் மற்றும் ஏராளமான கழகத்தினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி புகைப்படம் சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மறுமலர்ச்சி மைக்கேல் 
மதிமுக இணையதள அணி - ஓமன்