07-06-2015 அன்று ஈரோடில் மதிமுக இணையதள அணியின் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழின முதல்வர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் தியாகவேங்கை திரு.கணேசமூர்த்தி அவர்களின் அலைபேசி மூலம் ஆற்றிய உரை இதோ உங்களுக்கு எழுத்து வடிவத்தில்...
தமிழ்தாயின் தலைமகனான அறிஞர் அண்ணா அவர்களின் பாசறை வார்ப்பான எனது ஆருயிர் சகோதர்ர் கணேசமூர்த்தி அவர்களே!
இயக்கத்தின் எதிர்கால நம்பிக்கையை எங்கள் நெஞ்சங்களில் விதைத்து கொண்டிருக்கின்ற இந்த அறிவுயுகத்தில் கணிப்பொறி யுகத்தில் மின்னல் வேகத்திலே செய்திகளை பரிமாறி தமிழினத்தை பாதுகாக்க துணை நிற்கின்ற இணையதள சகோதர்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
தவறுகள் நடந்திருக்கின்றன, ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன, அதனால் அதாவது ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைகின்ற ஆபத்தை சந்தித்து கொண்டிருக்கிறது திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்றுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் இயக்கம் உதித்த நாள் முதல் கொள்கையில் எந்த கட்டத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் எந்த இடத்தில் எந்த துறையில் எந்த கூட்டணியில் இருந்தாலும் கொள்கைக்காக லட்சியத்துக்காக அதிகமான விலை கொடுத்த இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.
இந்த தமிழ் இனத்திற்கு வந்திருக்கக்கூடிய சோக வரலாறு ஈழத்தில் நம் காலத்தில். இன்னும் ஈழத்தமிழர்களை காப்பதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்திருக்கிற விலையை போல எந்த ஒரு இயக்கமும் தன்னை ஆட்படுத்தி கொண்டதில்லை.. அதற்காக கடுமையாக நாம் போராடி வந்திருக்கிறோம். விடுதலைபுலிகளின் தடையை உடைப்பதற்கு நாம்தான் இன்றைக்கும் களத்திலே இருக்கிறோம்..நீதிமன்றத்திலே நிற்கிறோம். முரண்பாடு இருந்தது.
24 மணி நேரத்தில் உதறி எறிந்து விட்டு நரேந்திர மோடி அரசை எதிர்த்து கருப்புக் கொடி உயர்த்தினோம். இந்த துணிச்சல் நம்மை தவிர வேறு யாருக்கும் வராது. ஆகவே ஒரு சோதனையான காலக்கட்டம்.
திராவிட இயக்கத்தை பாதுகாக்கக்கூடிய முழு தகுதியுள்ள ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்தான். நம்மை எவரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத நாணயமானவர்களாக, நேர்மையாணவர்களாக, கொள்கையாளர்களாக நாம் இருந்து வருகிறோம். இதை மக்களிடம் முன்னெடுத்து செல்வதற்கு வளரும் தலைமுறையாகிய நீங்கள்தான் செய்ய முடியும். எங்களுடைய பருவம் ஏறத்தாழ நாங்கள் எங்களுடைய இடைப்பட்ட காலத்தை கடந்து நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போய் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நீங்கள் இயக்கத்தினுடைய எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள்தான். அந்த வித்த்தில் உங்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். உங்களுக்கு எந்த விதத்தில் நன்றி தெரிவிப்பது என்று வார்த்தைகளை தேடுகிறேன். என் அருமை தம்பிகளே...உங்களுடைய முயற்சிகளுக்கு என் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இந்த இயக்கத்துக்கு எல்லாவித்திலும் எந்த சூழ்நிலையிலும் பக்கபலமாக இருக்கிறீர்களே. உங்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது தம்பிகளே... உங்கள் சொந்த வாழ்விலும் உயருங்கள். உங்கள் சொந்த வாழ்விலும் வெற்றி பெறுங்கள். இந்த சமூக அக்கறையோடு நீங்கள் எடுக்கும் முயற்சியிலும் வெற்றி காண வாழ்த்துகிறேன். வணக்கம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment