மக்கள் கண்பாணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் நடத்தும் ஆந்திர போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்திற்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கானஉறுதியேற்பு பொதுக்கூட்டம் நாளை 26-06-2015 வெள்ளிகிழமை மாலை 5 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா சிலை போளூர் என்ற இடத்தில் நடைபெறுகிறது. உறுதியேற்பு கருத்துரையை மதிமுக பொதுசெயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்கள், சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொன்டு சிறப்புரையாற்றுகிறார்கள். எனவே கழகத்தின் கண்மணிகள் அனைவரும் கலந்துகொண்டு 20 தமிழர்களுக்கு நீதிகிடைக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment