இன்று ராசபாளையத்தில் நடந்த இனிய இணையதள நண்பரும் தலைவர் வைகோ அவர்கள் வழி நடக்கும் விரிவுரையாளருமான சகோதரர் விஜயகுமார் - ரம்யா அவர்கள் திருமணத்தை தமிழின தலைவர், பார் போற்றும் படைதலைவன் வைகோ அவர்கள் நடத்தி மணமக்களுக்கு திருக்குறள் கொடுத்து தமிழ் போல தழைக்க வாழ்த்தினார்.
இத்திருமண விழாவில் பேசிய தலைவர் வைகோ அவர்கள், தன்னல மறுப்பாளனாக இருந்தால் மட்டுமே திராவிட கொள்கையில் சிறக்க முடியும் எனவும், கடந்த காலங்களில் திமுக போராட்டங்களில் ஈடுபட்டதை பற்றி பேசி அதற்காக நாண் பங்கு கேட்கவில்லை, தேவையுமில்லை, அது முடிந்து போன கதை, வெகுதூரம் வந்து விட்டோம்... ஆனால் லட்சியங்கள் மாறுவதில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தலில் உங்களை விற்காதீர்கள், பிறகெப்படி உங்கள் வாரிசுகள் வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். வருகிற செப்டம்பர் 15 க்கு பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் விசுவரூபம் எடுக்கும் எனவும் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது தொண்டர்களிடையே மிகுந்த ஆரவாரம் எழுந்தது.
விஜயகுமார் - ரம்யா தம்பதியர் நலமோடும் வளமோடும் மகிழ்வோடும் பேரோடும் புகழோடும் சீரோடும் சிறப்போடும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment