பரபரப்பாக செயல்பட்டு வரும் பொள்ளாச்சி மதிமுக அலுவலகத்தின் பொறுப்பாளராக உள்ளார் ரா.கிருஷ்ணமூர்த்தி. அதிகாலை எழுந்தவுடன் தன் இல்லம் போல தூய்மைபடுத்தி விட்டு அலுவலகத்திற்கு வரும் நாளிதழ்களை படித்துவிட்டு இருப்பார். கட்சி தொண்டர்கள் மீது இவரும் இவர் மீது கட்சி தொண்டர்களும் காட்டும் வாஞ்சையினை அளவிட முடியாது. நமது இயக்கம் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகள் குறித்து தன் சொந்த செலவில் சுவரொட்டி, சுவர்விளம்பரம் செய்வார்.
வேலூரில் ஆந்திர அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இவர் போனபோது நமது தலைவர் வைகோ அவர்கள் கிருஷ்ணமூர்த்தி நல்லா இருக்கீங்களானு இவரை பார்த்து கேட்டது பற்றி அனைவரிடத்தில் சொல்லி சந்தோசப்பட்டார்.
செய்தி சேகரிப்பு: சரவணன் மணிவேல் முகநூல்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment