மதிமுக ஈரோடு மாவட்ட நகர ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகம் அண்ணா அறிவகத்தில் இன்று 20-06-2015 காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட செயலாளர் தியாகவேங்கை கணேசமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 107 வது அண்ணா மாநாடு திருப்பூர் பல்லடத்தில் நடப்பது குறித்தும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,...
1. ஈரோடு கருங்கல்பாளையத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட சார்பதிவாளர் அலுவலகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேற்படி இடம் ஈரோடு நகர எல்லைக்கு வெளியே பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த இடம் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத இடமாகும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் தலையிட்டு சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் கருங்கல்பாளையத்தில் அல்லது நகரத்திற்குட்பட்ட இடத்திற்கு மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
2. ஈரோடு நகரில் சென்னிமலை சாலையில் இருந்து சாஸ்திரி நகரினை இணைக்கும் ரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்ற நிலையில் மேம்பாலத்தில் இருந்து சாலை சாலை இணைக்கும் சாலையினை போட வேண்டிய மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் அதற்கான பணிகளை தற்போது வரை ஆரம்பிக்காததை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு உடனே துவங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறது.
3. ஈரோடு நகரில் மணிக்கூண்டு முதல் கிருக்ஷ்ணா தியேட்டர் வரையுள்ள மக்கள் நடமாட்டம் உள்ள சாலையின் இருபுறமும் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment