தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டம் ஆற்றின் மேல் 1941 ஆம் ஆண்டு தலைவர் வைகோ அவர்களின் தாத்தா கொடைவள்ளல் உயர்திரு கோபால்சாமி நாயக்கர் அவர்கள் நகர சபை தலைவராக இருந்த போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், குடிநீர், பெற அணையை செம்மைப்படுத்தி, அதன்மேல் பாலம் கட்டினார், ஆனால் இப்போது பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் அந்த திருவைகுண்டம் அணையைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கழகப் பொதுச்செயலாளர் அறிவுறுத்தலுக்கு இணக்க மாவட்டச் செயலாளர் ஜோயல் வழக்குத் தொடர்ந்திருந்தார், இவ்வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் திருவைகுண்டம அணையை துர் வாருவதற்கு மாநில அரசு அரசை வலியுறுத்தியது.
ஆனால் அந்த தீர்ப்பை அலட்சியம் செய்த தமிழக ஜெயலலிதா அரசைக்கண்டித்து, ஜூலை 6 ஆம் தேதி, நானே களத்தில் இறங்கி மக்களை திரட்டி, கழக தொண்டர்களோடு, மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள், தட்டுகளோடு தூர்வாருவேன் என்று ஆற்றை பார்வையிட்டு நேற்று அறிவித்துவிட்டு இன்று அனைத்து விவசாயிகளுக்கு அழைப்பும் விடுத்தார் வைகோ!
அதை கவனித்த தமிழக அரசானது, திருவைகுண்டம் ஆற்றை தூர்வாருவதாக இன்று அறிவிப்பு செய்தது! இது தலைவர் வைகோ அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தலைவர் எடுக்கும் ஒவ்வொரு மக்க்ள் பணிக்கும் அங்கிகாரம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
22 வருடமாக மக்களுக்கு பணி செய்து மதிமுகவின் செயல்பாட்டை, மக்கள் சேவையை, எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் செய்துகாட்டியிருக்கிறோம். இதனால் மக்கள் மனதில் மதிமுகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அது வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்குகளாக பிரதிபலிக்கும். அப்போது மதிமுக பீனிக்ஸ் பறவையை போல மேலே மேலே மேலே பறக்கும், துரோகிகளும், எதிரிகளும் கழகத்தையும் வழிநடத்திய தலைவரையும் அண்ணார்ந்து பார்க்கும் நிலை உருவாகும். மறுமலர்ச்சி திமு கழகம் இவ்வளவு நாள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஓயாது பாடுபட்டுள்ளதை மக்கள் இப்போது நன்கு அறிகிறார்கள். விதைத்திருக்கிறோம், விதைத்துக்கொண்டே இருப்போம். அறுவடை காலம் நெருங்குகிறது. சோர்வடையாமல் பணியாற்றுவோம். அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு உயருவோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment