மறுமலர்ச்சி திமுக கழக பொதுசெயலாளர் பெருமதிப்பிற்குரிய தலைவர் வைகோவின் நம்பிக்கை தளபதி, கழகத்தின் ஆட்சிமன்றக் குழு செயலாளர், கொங்கு மண்டலத்தின் கொள்கைக் காவலர், எழுச்சி மாநாடு நடத்திய எழுச்சி நாயகன், ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளர் தியாகவேங்கை கணேசமூர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
அண்ணன் அ.கணேசமூர்த்திEX.MP அவர்கள் தமிழீழ சோமு திருமண வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதிமுக இணயதள நண்பர்கள் கலந்துரையாடலில் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். அப்போது அவர்களின் தமிழ் பற்றை அவரின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காண முடிந்தது. தமிழில் பேசுங்கள், தமிழில் வாழ்த்துங்கள், தமிழில் எழுதுங்கள், தமிழில் பெயர் வையுங்கள் என பல்வேறு கருத்துக்களை தமிழ் பற்றியே கூறிவிட்டு, யாருக்காவது தமிழில் எண்களை எழுத தெரியுமா என்று இணையதள அணி நண்பர்களிடத்தில் கேட்டபோது அனைவருமே திருதிருவென முழித்தோம். அப்போது சொன்னார் நாமே தமிழில் எண்களை எழுத படிக்க தெரியாமலிருக்கிறோம். எனவே முதலில் தமிழ் எண்களை படிக்க எழுத ஆரம்பியுங்கள், வெற்றி காணுங்கள் என வாழ்த்தினார். அப்படிபட்ட தமிழ் பற்றாளரை மதிமுகவின் தியாக வேங்கையை தமிழ் போல தழைக்க வாழ்த்துகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment