சிவகங்கை மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. இதில் அரசியல் ஆலோசனைகுழுச் செயலாளர் மாவட்டச்செயலாளர் புலவர் செவந்தியப்பன் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை தனி வட்டமாக அறிவிக்க தொடர் போராட்டங்களை நடத்திய காளையார் கோவில் மதிமுக ஒன்றியச்செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான கேப்டன் அருள்ராஜ் அவர்களுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்படது..
செப்டம்பர் 15ல் திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2016தேர்தலுக்கான களப்பணிகளை இன்றுமுதல் ஆரம்பிக்க வேண்டும் எனவும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் மாநாடு விளம்பரம் செய்யப்பட வேண்டும், மாவட்டக்கூட்டத்தை தொடர்ந்து ஒன்றிய நகர செயல்வீரர்கள் கூட்டம் கூட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment